Latest News

September 28, 2015

இலங்கையில் முதல் முறையாக 'மதுரை மல்லி' சாகுபடி ஆரம்பம்
by admin - 0

இலங்கையில் மலர் சாகுபடியை பெரிய அளவுக்கு முன்னெடுக்கும் திட்டமொன்று நாட்டின் வட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லைகைப் பூச்செடிகள் வவுனியாவிலுள்ள பண்ணை ஒன்றில் வர்த்தக ரீதியில் நடப்பட்டுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அலுவலகத்தின் முயற்சியில், உள்ளூர் வர்த்தகர் ஒருவர் இதில் இறங்கியுள்ளார்.
இலங்கையில் மலர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், அதற்கான உறுபத்தி வர்த்தக ரீதியில் இல்லாத குறை உணரப்பட்டதாலேயே இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மதுரையில் மல்லிகை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்டவர்களின் உதவியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்த மல்லிகைப் பண்ணையை ஏற்படுத்தியுள்ள உள்ளூர் வர்த்தகர் பிரேமந்திரராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மல்லிகை சாகுபடியில் ஆர்வம் காட்டினால் தேவையான உதவிகள் செய்யப்படும் என இந்தியத் துணைத் தூதர் நடராஜன் கூறுகிறார்.
இந்தத் திட்டத்துக்காக இந்தியாவிலிருந்து 30,000 மதுரை மல்லிகைச் செடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
« PREV
NEXT »

No comments