Latest News

September 20, 2015

மத்திக்கும் மாகாணத்துக்கும் அதிகரிக்கின்றது இடைவெளி - வடக்கு முதலமைச்சர்
by Unknown - 0

அரசியலானது மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களைவழங்கவில்லை. எங்கள் பிரச்சினைகள் அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் வரை எமது மக்கள் காத்துக்கொண்டிருக்க முடியாது. எனவே உரிய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப உள்நாட்டு வெளிநாட்டு எமது உறவுகளின் உதவியுடன் முன்னேறுவது தான் சிறந்தது.

இவ்வாறு வடமாகாண முதலமைச்சர்க.வி.விக்னேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார். 

துன்னாலை மத்தி, கரவெட்டியிலுள்ளகோவிற்கடவை சனசமூக நிலையத் திறப்பு விழா நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. அதில் விருந்தினராகக் கலந்து கொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும்

தெரிவிக்கையில்,

தன்கையே தனக்கு உதவி என்பதற்கேற்ப மக்கள் அரசையே எதற்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்காது தனியார் நிறுவனங்களுடனும் தனி மனிதர்களுடனும் சேர்ந்து முன்னேறுவதுதான் இன்றைய காலகட்டத்தில் உசிதமானது. காரணம் அரசியல். மக்கள் பங்களிப்புடன் ஆரம்பிக்கின்ற எந்தவொரு வேலைத் திட்டமும் தோற்றுப்போ னதாகச் சரித்திரம் இல்லை.
எமக்குக் கிடைக்கம் நிதியும் மிகச் சொற்பமே. எமது வருமானத்தை அதிகப்படுத்த சட்டதிட்டங்களைத் தற்போது உருவாக்கி வருகிறோம். அங்கும் நியதிச் சட்ட திட்டங்களைஉருவாக்கக்கூடிய திறன் மிகுந்த அலுவலரின் பற்றாக்குறை எம்மைப் பாதித்துள்ளது.

தற்காலத்தில் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகளின் ஒழுக்கப்பாடானது எம்முன்னே பரந்து விரிந்து கிடக்கின்ற பெரிய விடயமாகவுள்ளது. எமது பிள்ளைகளை அல்லது எம்மைச் சார்ந்துள்ள பிள்ளைகளை எவ்வாறு ஒழுக்க சீலர்களாக மாற்றுவது என்பது எம்முடைய கவனத்தை ஈர்க்க வேண்டும். அவர்களின்பழக்கவழக்கங்களைப் பாதிக்கக்கூடிய அடிப்படைக் காரணிகள் எவை? போதைப் பொருள்கள் எவ்வாறு மாணவர்களின் கைகளுக்குக் கிடைக்கின்றன? அதற்கான பணம் எவ்வாறு கிடைக்கிறது? போன்ற விடயங்களில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

எமது சமூகத்தின் அழியாச் செல்வமாக விளங்கக்கூடிய கல்வி என்ற பெரிய சொத்தை எவ்வாறாவது அதன் மூல வேருடன் தகர்த்தெறிந்து எம்மைக்கையாலாகாதவர்களாக மாற்றி அடிமைச் சீவியம் நடத்தக்கூடிய கீழ்நிலைச் சமூகமாக மாற்றுவதற்குத் திட்டமிட்ட அரசியல் சதிவேலைகள் எம்முன்னே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதோ என்று எண்ண இடமுண்டு.

கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் எனப் பல செய்திகளும் வருகின்றன. மிகவும் பண்பட்ட சமுதாயமாகச் சிறந்த பழக்கவழக்கங்களுடன் கல்வியிலும் சிறந்துவிளங்கிய எமது சமூகம் சீர்கெட்டுப் போவதனை, வேண்டும் என்றே திட்டமிட்டு அழிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டு வாழாதிருக்க முடியாது. இவ்வாறான செயல்களைக் கண்காணிக்கக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய சக்தி சனசமூக நிலையங்களுக்கு உண்டு. இதன் காரணமாகப்பொ லிஸாருடன் பொதுமக்கள் சேர்ந்து எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ந்து அதற்கான குழு அமைக்க நடவடிக்கை எடுத்த வருகிறோம். 

விரைவில் மேல்மட்ட, நடுத்தர, கீழ்மட்டக் குழுக்கள் செயற்படவுள்ளன. மேல்மட்டக் குழு பிரதிப் பொலிஸ்மா அதிபர், அமைச்சர்கள் மட்டத்ததில் ஆராயும். நடுத்தரக் குழு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாகாண சபை உறுப்பினர் மட்டத்தில் ஆராயும்.மக்களிடையே கீழ் மட்டத்தில் செயற்படஇருக்கும் குழுக்களில் சனசமூக நிலைய அலுவலர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

எனவே மாணவர்கள், இளைஞர், யுவதிகள், உறவினர்கள், தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போதைப்பழக்கவழக்கங்களுக்கும்,களவு,கொள்ளைகளுக்கும் ஆளாவதாகத் தெரியவந்தால் அவர்களுக்கு அதனைக் கைவிடும்படி அன்பாக எடுத்துச் சொல்லவேண்டும்.

இல்லையயன்றால் எங்கள் குழுக்களிடம் அல்லது உங்கள் கல்லூரிகள் மூலமாக எடுத்துச் சொல்லுங்கள். முயற்சித்தால் ஆகாதது ஒன்றுமில்லை என்றார்.

குறித்த சனசமூக நிலையம் சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் இந்தியத் துணைத்தூதர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். 
« PREV
NEXT »

No comments