Latest News

September 24, 2015

வாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.
by அகலினியன் - 0

வாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.
வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வாழைப்பழம் ஒரு மென்மையான மலமிளக்கி. ஆகும். மேலும் வயிற்றுப் போக்கு சீதபேதி ஆகியவற்றை எதிர்த்து போக்கவல்லது. குடற்புண்களையும், ரத்தக் கசிவையும் (இன்டஸ்டினல் லிசென்ஸ்) போக்க வல்லது. வாழைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன் தரக் கூடியது. வாழைப் பூக்கள் ஒரு துணை உணவாக சரியான செரிமானம் இல்லாத போதும் குடற்கோளாறுகள் உள்ள போதும் இருந்து உடல் நலம் காக்கக் கூடியது. வாழையின் வேர்ப் பகுதி வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்ற வல்லது. புதியதான வாழைக் கிழங்கை வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் ,வெகுமூத்திரம் குறிப்பாக பெண்களின் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, மாதவிலக்கு கோளாறுகள் ஆகியவற்றுக்கு இந்திய ஆயுர்வேத மருத்துவம் சிபாரிசு செய்கிறது. மேலும் பூக்களை மூச்சிறைப்பிற்கும் எவ்விதமான இரத்தக் கசிவிற்கும் பெண்களின் இன உறுப்பில் ஏற்படும் திரவக் கசிவிற்கும் வெள்ளைப் போக்குக்கும் சிபாரிசு செய்கிறது. நன்கு கனிந்த வாழைப்பழம் வயிற்றிலுள்ள புண்களை ஆற்றுவதோடு ரத்த அழுத்தத்தை (ஹைப்பர் டென்ஷன்) குறைக்க வல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழைப் பழத்தில் செரிந்துள்ள கார்போஹைட்ரேட்'' என்னும் மாவுச் சத்தும் டிரிப்டோபேன்'' என்னும் ரசாயன பொருளும் ரத்தத்தில் செரோடோனின் என்னும் சத்தை அதிகமாக உற்பத்தி செய்ய உதவுவதால் உடலின் ரத்த அழுத்தம் சமநிலைப்படுத்தப்படுகிறது. என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. வாழைக்காயில் உள்ள நார்சத்து ரத்த நாளங்களின் அடைப்பை தவிர்க்க வல்லது. இந்நார்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தைக் கட்டுக்குள் வைக்கக் கூடியது. குறிப்பாக கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தக் கூடியது. மேலும் வாழைக் காயில் குடற் புண்ணைத் தடுக்கக் கூடிய (ஆன்டி அல்சரோஜெனிக் அசில் ஸ்டெரைல் கிளைகோஸைட், சிட்டோ இன்டோசைட் மருத்துவப் பொருள்கள் நிறைந்துள்ளதாகவும் நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாழைத் தண்டில் ஹெக் லோஸஸ் (32.4%)'' மற்றும் யுரோனிக் ஆசிட்'' (52.5%) ஆகிய இரண்டு பொருள்களையும் உள்ளடக்கிய பெக்டின் என்னும் மருத்துவப் பொருள் கொழுப்பை குறைக்க வல்லது. என்றும் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் வாழைத் தண்டில் சிறுநீரகக் கற்களை குறைக்கக் கூடிய மற்றும் கற்கள் உருவாகாமல் தடுக்க கூடிய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. உப்புப் படிகங்கள் உருவாவதைத் தடுப்பதோடு கரைத்தும் விடுகின்றது. வாழைக்கிழங்கு நோய்க் கிருமிகளைத் தாக்கவல்லது. பூஞ்சைக் காளான்களைத் தடுக்க வல்லது. வாழைப் பிஞ்சால் ரத்த தடுப்பு, ரத்த மூலம், அதிமூத்திரம், வயிற்று ரணம் ஆகியன போகும். பேயன் வாழையால் மலம் இறங்கும் (லேக்ஸேட்டிவ்) உட்சாலை போகும். மொந்தன் வாழையால் பித்தம்காமாலை, தாது வறட்சி தீரும். வாழைக்காய் பொதுவில் கபம், பித்தம், ரத்த தோஷம், எரிச்சல், கடியம், அடிபடுதலால் தோன்றும் நோய் என்பனவற்றைப் போக்கும். வாழைப்பழம் நாவறட்சி, கண்நோய்கள், நீரிழிவு என்பனவற்றையும் போக்கும். இவ்வளவு பெருமைகளை உடைய வாழை உச்சி முதல் வேர் ஈறாக தன்னை இவ்வுலக உயிர்கள் உய்யும் வண்ணம் அர்ப்பணிக்கிறது.

வாழை மரம் வாயில் தோரணத்துக்கு, வாழை இலை உண்பதற்கு மேற்பற்றாக உபயோகிப்பதற்கு, வாழையின் மேற்பட்டை நாராக பூ கட்ட பயன்படுத்தலோடு ஆடைகள் நெய்யவும் பயன்படுகிறது. 

வாழைத் தண்டு மற்றும் கிழங்கு உணவாகவும், மருந்தாகவும், ரசவாதத்துக்காகவும் பயன்படுகிறது.
« PREV
NEXT »

No comments