Latest News

September 26, 2015

கொடிகாமத்தில் குடும்பஸ்தார் கைது 4ம் மாடி கொண்டு செல்லப்பட்டார்
by admin - 0



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 1997 ஆம் ஆண்டு விலகி குடும்ப வாழ்வில் ஈடுபட்டுவந்த கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தார் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பரிவுப் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு விசாரணைக்காக 4ஆம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்த விசேட குற்றத்தடுப்பு பரிவினரே இவரைக் கைது செய்து சென்றுள்ளனர்.
கச்சாய் தெற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 42 வயதான மார்க்கண்டு நேவிநாதன்
என்பவரே கைது செய்யப்பட்டவராவவார்.

1997 ஆம் ஆண்டு ரை புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்ட இவர், பின்னர் அதிலிருந்து விலகி திருமணம் செய்து குடும்த்துடன் வாழ்த்து வந்துள்ளார். வன்னியில் இருந்த இவர் இறுதிப் போரின் பின்னர் மனைவி குழந்தைகளுடன் வந்து தென்மராட்சி - கச்சாய் பகுதியில் வசித்து வந்தார். கடற்றொழிலில் ஈடுபட்டு குடம்பத்தை இவர் காப்பாற்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் எதற்காகக் கைது செய்யப்பட்டர் என்ற விபரம் தெரியவில்லை. ஏன அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

வீட்டுக்கு வந்த பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அவரைக் கைது செய்ததற்கு ஆதாரமாக எழுத்துமூல ஆவணம் ஒன்றை குடும்பத்தவர்களிடம் கொடுத்துள்ளனர்.
அதில் கைதானவர் விசாரணைக்காக கொழும்பு நாலாம் மாடிக்கு அழைத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments