Latest News

August 22, 2015

நெருங்கி வரும் ஐ.நா கூட்டத் தொடரும் வீச்சுப் பெறும் மில்லியன் கையெழுத்து இயக்கமும் !
by Unknown - 0

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் முனைப்பும்,போர்க்குற்றப்பொறியில் நாட்டை சிக்கவைக்க முடியாது என்ற சிறிலங்கா அரசியற் தலைவர்களின் சூழுரைப்பும் ஐ.நா கூட்டத் தொடரை மையங்கொண்டு வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் 13 இலட்சங்களை கடந்து உற்சாகத்துடன் செல்கின்றது.


புலம்பெயர் தேசங்களில் விடுமுறைகால மக்கள் ஒன்றுகூடல்களில் நேரடியாக மக்களிடத்தில் கையெழுத்தினை பெறும் செயல்முனைப்புகள் வீச்சுடன் இடம்பெற்று வருகின்றன.

'போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது' என்று இக்கையெழுத்து மனுவில் கோரப்படுகின்றது.

இச்சூழலில் சிறிலங்காவின் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க அவர்கள் போர்க்குற்றப்பொறியில் நாட்டை சிக்கவைக்க முடியாது அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.









« PREV
NEXT »

No comments