Latest News

August 23, 2015

சிங்கள கட்சியினர் ஒருபோதும் தமிழர்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள்: பழ.நெடுமாறன்
by admin - 0

பழ.நெடுமாறன்
சிங்கள கட்சியினர் ஒருபோதும் இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள். என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

நெல்லையில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசும் போது மேலும் அவர் கூறியதாவது: இலங்கையில் தமிழர்களை யார் அதிகமாக ஒடுக்குவது என்பதில் தான் சிங்கள கட்சிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது.

ஆனால், தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்து இருக்கிறார்கள். இந்த வெற்றியை, ஐ.நா.பேரவை, இலங்கை தமிழர்கள் அளித்த பொது வாக்கெடுப்பு தீர்ப்பாக கருத வேண்டும். எனவே, அங்குள்ள தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என ஐ.நா. பேரவையை நான் கேட்டுக் கொள்கிறேன். ரனில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்தபோது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ஓர் உடன்படிக்கை செய்தார்.

அதில், தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், சிங்கள குடியேற்றத்தை நிறுத்துதல் ஆகிய அனைத்தையும் ஏற்று கொண்டு, உடன்பாடு செய்யப்பட்டது. ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த உடன்பாட்டை ரனில் விக்ரமசிங்கே கொண்டு வந்தபோது, அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், அந்த உடன்படிக்கையை கிழித்து எறிந்தனர்.

அந்த உடன்படிக்கையை ரனில் விக்ரமசிங்கே அமல்படுத்த வில்லை. ராஜபக்சே மந்திரிசபையில் சிறிசேனா மந்திரியாக இருந்தபோது, ஐ.நா.மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார். ஆகவே, இவர்கள் இருவரும் இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என கூறினார்.
« PREV
NEXT »

No comments