Latest News

July 18, 2015

"இது நம்மவர்" இந்த வாரம் வைரமுத்து தர்மகுலநாதன்
by admin - 0

யாழ் உதைபந்தாட்டத்தின் மறு உருவம் ஊரேழு றோயல்  வைரமுத்து தர்மகுலநாதன்
(வெள்ளை  )

இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு கழகத்துக்காக விளையாடிவரும் ஒரே குடும்பத்தை சேர்த 4 திறைமையான வீரர்கள் வைரமுத்து தர்மகுலநாதன் குடும்பம் என்ற பெருமைக்குரியவர்கள்.

யாழ்மாவட்டத்தில் றோயல் வெள்ளை என்றல் விளையாட்டுத்துறையில் தெரியதவர்கள் இருக்கமுடியாது ஊரேழு றோயல் விளையாட்டுக்கழகத்தை சேர்த வைரமுத்து தர்மகுலநாதன் என்ற வீரர் உதைபந்தாட்டத்தின் மறுஉருவமாக கருதமுடியும் அவ்வாறு பல சாதனைகளுக்கு உரியவர் றோயல் வெள்ளை இன்று 50 வயதை தாண்டியும் சற்றும் குறையாத இளமை துடிப்புடனும் உற்சாகத்துடனும் எதிரணிகளை கலங்கடித்துக்கொண்டிருக்கும் நட்சந்திரவீரர் றோயல் வெள்ளை அனுபாவம் திறமைக்கு துடிப்பு இளமைக்கு அப்பால் அனைவரின் நன்மதிப்பை பெற்றவர் மிகவும் எளிமையான மனிதர் போட்டிகளின் போது  கழகங்களுக்கிடையிலான ஏற்படும் குழப்பங்களை ஒரு வார்தையில் தனது கழகத்தைகட்டுப்பாடுத்து தன்மை இவரிடம் உள்ளது இவரை மீறி எந்த ஒரு உறுப்பினர்களும் செயற்படமாட்டார்கள் அவ்வளவு மாரியதை உரியவர் வெள்ளை  வடமாகாணத்தில் மிக சிறந்த உதைபந்தாட்ட கழகங்களில் ஊரேழு றோயல் அணியும் ஒன்று நீண்ட வரலாற்றை கொண்ட மிகசிறந்த கழகமாக விளங்கிவருகின்றது பல வருடங்காளக விளையாடிவரும் வெள்ளை தனது கழகத்தின் மேல் திரத பற்றுகொண்டவர் இதனால் தனது 3 புதல்வர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பமால் தனது கழகத்துக்காவே வைத்து விளையாடிவருகின்றார் அத்துடன் பல வீரர்களை உருவாக்கிய பெருமையும்  யாழ்மாவட்டத்தில் அதிக விருதுகளை பெற்றவர் என்ற பெருமையும் விளையாட்டுத்துறைக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்பணித்துவரும் என்ற பெருமையுடையவர் 


இவருக்கு வடமாகாணத்தில் அதிக ரசிகர்கள் உதைபந்தாட் ரசிகர் கூட்டம் உள்ளது ஊரேழு றோயல் வெள்ளை விளையாடும் போட்டி என்றால் அதனை பார்பதற்கு அதிகளவான ரசிகர்கள் திரளுவர்கள் இவ்வாறு பல திறமைகளை கொண்டவர் வைரமுத்து தர்மகுலநாதன் (றோயல் வெள்ளை) அவர் இன்னும் பல ஆண்டுகாலமாக உதைபந்தாட்டத்தில் சாதனை படைக்கவேண்டும் என அனைவரும் வாழ்துவோம்  

தமிழர்களின் விளையாட்டுத்துறையில் இவருக்கு என்றும் தனியிடம் இருக்கும் என்பதை நாம் பதிவுசெய்வோம் இவரின் திறமை மதிப்பு அனுபாவம் எளிமையும் இவர் தற்போழுது விளையாடிவரும் வயது  இவரின் பிள்ளைகளுடன் மைதானத்தில் விளையாடும் நுட்பம் போன்றவற்றை ஆய்வுசெய்து அவருக்குரிய அதிஉச்ச கௌரமான விருதை பெற்றுகொடுக்க விளையாட்டு துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே விளையாட்டு அவதானிகளின் வேண்டுகோள்.

விவசாயி இணையத்துக்காக

ஆக்கம் எஸ்.செல்வதீபன்
« PREV
NEXT »

No comments