Latest News

July 13, 2015

இலக்கை அடைந்தது 10 லட்சம் கையெழுத்து தொடர்ந்து முன்னேறுகிறது போராட்டம்
by admin - 1



விடுதலை வேண்டி போராடும் ஒவ்வொரு இனமும் தமக்கென்று ஒரு சுகந்திர அரசு வேண்டும் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதுடன் அந்நிய சக்திகள் தங்கள் மீது ஆதிக்கமும் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல் உலகில் மூத்த குடி மக்களான தமிழர்கள் என்றுமே வேற்று ஆதிக்க சக்திகள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அடிமைகளாக வைத்திருப்பதை என்றுமே அனுமதிக்கமாட்டார்கள். 


அதனால்தான் சிங்கள அராஜக கொடுங்கோல் அரசை எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்ட பலமான விடுதலைப்புலிகள் மறைந்து வாழ்ந்தாலும் அவர்கள் நாமமே இன்றும் போராட்ட பலம். 



சிங்கள அரசை எதிர்த்து போராடிய தமிழர்களை உலக போர் நிஜதிகளுக்கு முரணாக  இரசாயன ஆயுதங்களையும் ,  கொத்து குண்டுகளையும்  போட்டு ஈவிரக்கமற்று  கொத்து கொத்தாக  கொன்று குவித்தது. இப்படிப்பட்ட இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த ஐக்கிய நாடுகளை கோரும் 10 லட்சம் கையெழுத்து வேட்டை தமிழீழ நாடுகடந்த தமிழீழ(TGTE ) அரசினால் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டது.

இன்று அந்த மிகப்பெரும் போராட்டம் தனது இலக்கை அடைந்துள்ளது . ஶ்ரீலங்கா அரசு மற்றும் அவர்களின் கைக்கூலிகளின் பொய் பிரச்சாரங்கள் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் இளம் தலைமுறைகளின் ஓயாத எழுச்சியுடன் மாபெரும் இலக்கை இன்று தமிழினம் பெற்றிருக்கிறது. 

இந்த வெற்றி தமிழ் மக்களால் சிங்கள பேரினவாத அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும், சிங்களம் படுகொலை செய்த ஒவ்வொரு உறவுகளின் ஆத்மாக்களின் மீள் எழுச்சியாகவும் எழுச்சி பெற்ற இந்த போராட்டம் தமிழீழ விடுதலையின் ஒரு படிக்கல். உலக வரலாற்றில் ஒரு இனப்படுகொலை அரசை தண்டனைக்கு உட்படுத்துங்கள் என்று  10 லட்சம் கையெழுத்து பெற்றுக்கொண்ட நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

பத்து லட்சம் மக்களின் இந்த வேண்டுகோளை ஐநா சபையானது உள்வாங்கி சிங்கள இனப்படுகொலை அரசை அணைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த அதிஉச்ச அழுத்தத்தை ஐநா சபைக்கு வழங்கும்.என்பதில் மக்களுக்கு ஐயமில்லை.  ஒருமில்லியன் மக்களின் வேண்டுகோளை ஐநாவால் மறுதலிக்க முடியாது அத்துடன் இந்த வெற்றி சிங்கள அரசை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும்  வேண்டும் உலக நாடுகள் அதற்கு தங்களின் முழுமையான அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்பதுடன் உலக மக்களின் ஜனநாயக போராட்டத்துக்கு அங்கீகாரம் தந்து  தமிழீழ தனியரசை தமிழீழ மக்களுக்கு பெற்றுத்தர ஆவன செய்யவேண்டும் என்பதே தமிழ் மக்களின் வேண்டுகோளாகும்  .

கையெழுத்து தொடர்ந்து  மேற்கொள்ளப்படுகிறது தொடர்ந்து உங்கள் பங்களிப்புக்களை வழங்குங்கள் 


வாக்களிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியது..
.
கீழுள்ள முகவரியை அழுத்தவும்...
http://www.tgte-icc.org/
அல்லது
http://www.tgte-icc.org/tamil.asp

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் 






கையெழுத்து போராடத்தின் சில பதிவுகள் 





























« PREV
NEXT »

1 comment

Anonymous said...

Ennal poradhathan mudiyavillai ithu koodava seiyamudiyathu......