Latest News

July 21, 2015

ஒருமில்லியன் கையெழுத்துக்கு உலகநாடுகளுக்கு உண்மையை உணர்த்தும் அதற்கான மதிப்பை கொடுக்கும் -தமிழீழ விடுதலைக்கான மாணவர் - இளைஞர் கூட்டியக்கம்(இரண்டாம் இணைப்பு )
by admin - 0

ஒருமில்லியன் கையெழுத்துக்கு உலகநாடுகளுக்கு உண்மையை உணர்த்தும் அதற்கான மதிப்பை கொடுக்கும் என தமிழீழ விடுதலைக்கான மாணவர் - இளைஞர் கூட்டியக்கம் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்கள் 


"தமிழீழ விடுதலைக்கான மாணவர் - இளைஞர் கூட்டியக்கம்" சார்பில் இன்று  மாலை 3 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது  அதில் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்கள்.பன்னாட்டு நீதிமன்ற விசாரணையே தீர்வை தரும் என்றதை வலியுறுத்தி அனைத்து மனித உரிமை அங்கத்துவ நாடுகளுக்கும் அனைத்து இந்திய முதல்வருக்கும், அனைத்து தூதுவரலயங்களுக்கும் மனுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை அவையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களின் அறிக்கை சமர்பிக்கப்படும் வேளையில் "உலக நாடுகளை நோக்கிய தமிழக மாணவர்கள் இளைஞர்கள் போராட்ட அறிவிப்பையும்  இன்று வெளியிட்டுள்ளனர்.



இரண்டாம் இணைப்பு

" தமிழீழ விடுதலைக்கான மாணவர் - இளைஞர் கூட்டியக்கம்" சார்பில் இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கூறப்பட்ட செய்தி வருமாறு:

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா கூட்டத்தொடரில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் சபையின் போர்க்குற்றவிசாரணை அறிக்கையை வெளியிடாமல் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை மற்றும் நீதிமறுக்கப்பட்டு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் தற்போது வருகின்ற செப்டம்பர் மாதக் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் போர்க்குற்றவிசாரணை அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத்தமிழர்களின் உரிமைகளைமீட்டெடுக்க, சுதந்திர தமிழீழத்திற்குவித்திட இத்தருணம் மிகமுக்கியமானது என்பதை நாம் அறிவோம். எனவே ஐ.நா மன்றத்திற்கும் உலகநாடுகளுக்கும் நாங்கள் முன்வைப்பது ஒன்றே ஒன்று தான். தமிழீழ மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க, சுதந்திர தமிழீழம் அமைவதற்கு உறுதுணையாக இனப்படுகொலை செய்த இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நிதிமன்றத்தில் நிறுத்த ஐ.நா மன்றமும், ஐ.நா உறுப்பினர் நாடுகளும், இந்தியாவும் முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வேண்டுகோளை வெளிப்படுத்தும் மனு ஒன்றை ஐ.நா மன்றத்தில் அங்கம்வகிக்கும் உலக நாடுகள் அனைத்திற்கும் அளிக்கவுள்ளோம். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் பிரதான கட்சிகளுக்கும் இந்த மனுவை அனுப்பி அவர்களின் ஆதரவையும் கோரவுள்ளோம் என்பதை தெரித்துக்கொள்கின்றோம்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன், தமிழிழத்தில் இருக்கும் தமிழின துரோகி சுமந்திரனுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.





« PREV
NEXT »

No comments