Latest News

July 26, 2015

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உட்பட 36 பேர் விடுதலை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by Unknown - 0

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் உட்பட 36 பேரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பளித்துள்ளது.   6 ஆவது ஐ.பி.எல் போட்டியில் இந்திய அணியில் விளையாடி வந்த ஸ்ரீசாந்த், ராஜஸ்தான் அணியில் விளையாடிய அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.   

இதைத் தொடர்ந்து இந்த 3 பேருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   இந்த வழக்கில் 42 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.   இந்த நிலையில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து இன்று டெல்லி நீதிமன்றம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் மூன்று வீரர்கள் உட்பட 36 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.   இது பற்றி அஜய் சண்டிலா கூறுகையில்,   என் மீது சூதாட்ட வழக்கு தொடரப்பட்டது மோசமான கனவு என்றும், தற்போது இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக ஸ்ரீசாந்த் கூறுகையில், தற்போது என் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் நான் மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்குவேன் என்று கூறியுள்ளார்.   

இது பற்றி அங்கீத் சவான் கூறுகையில்இ    உச்சநீதிமன்ற தீர்ப்பால் இதுவரை தொடர்ந்த பதற்றமும் அதிருப்தியும் முடிவுக்கு வந்துள்ளதாகவும்இ மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments