Latest News

May 18, 2015

சுவிசில் இருந்து சென்றவரும் புங்குடுதீவு வித்தியா கொலையில் தொடர்பு…! திடுக்கிடும் தகவல்….??
by admin - 0

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். 17.05.2015 மாலையே இக்கைது இடம்பெற்றதாக புங்குடுதீவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் வேலணை பிரதேச சபையில் கடமையாற்றுபவர் எனவும் மற்றைய 4 பேரும் கொழும்பில் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சபையில் கடமையாற்றுபவரின் வீட்டிற்கு வந்து விட்டு இன்றைய தினம் மதியம் இவர்கள் கொழும்பு செல்லவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட கொலை சந்தேகநபர்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை தாக்கு முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து பொதுமக்களுக்கு அஞ்சி சந்தேக நபர்களை யாழ்ப்பாணத்துக்கு கடல்வழியாக கொண்டு சென்றுள்ளனர்.

இது தவிரஇ இன்றும் மாணவியின் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நிலையம் தாக்குதல்…

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட ஐவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ள நிலையில்

அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொலிஸாரை பின்தொடர்ந்தனர். வீதிகளை முற்றுகையிட்டு ரயர்களைப் போட்டுக் கொழுத்தி ஆர்ப்பரித்தனர்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பொலிஸார் சந்தேகநபர்களை ஊர்காவற்றுறைக்குக் கொண்டு சென்றனர். அதனைக் கேள்வியுற்ற பெதுமக்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு வீதிகளையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடல்வழியாக சந்தேகநபர்களை குறிகாட்டுவானுக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். அதனையும் கேள்வியுற்ற பொதுமக்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலின் போது பொலிஸார் இருவர் காயமடைந்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ம.சிவதேவன், துசாந்தன், சசிதரன், சந்திராஜ, நிசாந் உள்ளிட்டோர் வயது முறையே 31, 31, 26, 25, 23 ஐ உடையவர்களாவர். இந்த ஐந்து பெரும் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகிறது.

அத்துடன் இவர்களது கைதினை அடுத்து மற்றுமொரு சந்தேகநபரும் மக்களினால் பிடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டு பொதுமக்களினால் தாக்கப்பட்டார். இவர் சுவிசில் இருந்து சென்றவர் எனவும் தெரிய வருகிறது.

உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்த பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வேலணை பிரதேசசபை தலைவர் தவராசா ஆகியோர் தலையிட்டு மக்களிடையே சமரசத்தை ஏற்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மரணமடைந்த வித்தியா கொலை செய்யப்பட்ட இடத்தில் நின்று கொண்டு பிரேதத்தை மீட்க உதவியதாகவும் ,அவர்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவ்வாறு நடந்து கொண்டதாகவும் மக்கள் எமது செய்தியாளரிடம் குறிப்பிட்டனர்.

அத்துடன் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம் சந்தேகநபர்களின் விபரங்களை அடங்கிய கைத்தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய கையேடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

சந்தேகநபர்களின் விபரங்களை அடங்கிய கைத்தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய கையேடு குறித்த மேலதிக செய்திகளும், விரிவான விபரங்களும் விரைவில் வெளியாகும்…

புங்குடுதீவு வித்யாவின் கொலையில் ஒருவர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளதாக கூறியுள்ள காவல் துறை தரப்பு முழுமையான விபரத்தை நீதிமன்றின் அனுமதி இன்றி வெளியிட மறுத்து விட்டதாக கூறினாலும் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர் சுவிஸ் பிரஜை உள்ளார் என்பதை பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

« PREV
NEXT »

No comments