Latest News

May 04, 2015

மத்தியப் பிரதேசத்தில் பஸ் தீப்பிடித்து 50 பயணிகள் பலி
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya
மத்தியப் பிரதேச மாவட்டம், பன்னா மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பயணிகள் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்து 50 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு பஸ் மத்தியப் பிரதேசத்தின் சாகத்பூர் நகரில் இருந்து சாட்னா நகருக்கு புறப்பட்டது. அந்த பஸ்ஸில் சுமார் 55 பயணிகள் இருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை 75-ல் மாட்லா காட் என்ற பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டீசல் டேங்க் தீப்பிடித்து பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. பஸ்ஸுக்குள் சிக்கிக் கொண்ட 50 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

சிலர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்து பயணிகளின் உடல்களை மீட்டனர்.

ரூ.2 லட்சம் நிவாரண உதவி

இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் பலியானோர் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments