Latest News

February 28, 2015

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தமிழ் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படும் நிலையே தொடர்கின்றது-IFJ
by Unknown - 0

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வடமாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படும் நிலையே தொடர்கின்றது எனவும் இவ்வாறன நிலை தொடர்ந்தும் நீடிக்காமல் தடுக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச ஊடக கூட்டமைப்பு (IFJ) சுட்டிக்காட்டியிருக்கின்றது.



இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்திருந்த மேற்படி அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இதன் நிலையில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவ் அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவர்கள் தெரிவிக்கையில்,

ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னான காலப்பகுதியில் வெளிப்படையான வன்முறைகள் இல்லையென சகல பத்திரிகையாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

பயமுறுத்தலும் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும், பின்வருவனவற்றை உள்ளடக்கிய பத்திரிகைத்துறைக்கான சவால்கள் தற்போதும் காண்பபடுகின்றன.

நாட்டின் எதிர்காலம் குறித்து தளம்பல் நிலைப்பாடு ஏற்படுத்தும் சுய தணிக்கை, தவறுக்கான அணுகுமுறை மீதான வரையறை, பத்திரிகையாளர் மீதான தொடர் கடும் கண்காணிப்பும் நெறிப்படுத்துகையும் என அவ்வமைப்பு வகைப்படுத்தியிருந்தது.

வடக்கில் 2000ஆம் ஆண்டிலிருந்து 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காணாமற்போயுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகின்றனர்.

எனினும் ஒருவர் மீது கூட இதற்கான பொறுப்பு கூறப்படவில்லை. சீர்திருத்த நடைமுறையின் பகுதியாக திறந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அதிலும் சர்வதேச ஊடக அமைப்புக்களது கண்காணிப்பின் கீழான திறந்த விசாரணை எனும் யாழ்.ஊடக அமையத்தின் கோரிக்கையினை சர்வதேச மட்டத்தில் எடுத்து செல்லப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்துவதில் ஏற்கக்கூடிய வகிபங்கினை பத்திரிகை அமைப்புக்கள் இனங்காண வேண்டும். வடக்கில் தொழில் முறைப் பத்திரிகைத் தொழில், கட்டுப்பாடற்ற ஊடகத்தின் பெறுமதி என்பவற்றை ஆவன செய்யும் வகையில் பயிற்சியை அளிக்கச் சகல ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைய வேண்டும்.

இதேவேளை கொல்லப்படட ஊடகவியலாளர்கள் காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில்,

இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் சர்வதேச ஊடக அமைப்புக்களுக்கும் நாம் இதனை வலியுறுத்தி கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

100 நாள் புதிய அரசின் திட்டத்தின் கீழ் கட்டுப்பாடற்ற ஊடகம், மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான கடுங்கண்காணிப்பு, நெறிப்படுத்தல், ஆகியவற்றினையும் உள்ளடக்க அவர்கள் வலியுறுத்தப் போவதாக தெரிவித்தனர்.

சர்வதேச ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு பத்திரிகை நிறுவனங்கள் வன்னி, யாழ் ஊடகவியலாளர்கள் ஊடக அமைப்புக்கள் சந்தித்து வடக்கின் நிலமைகளை ஆராய்ந்துள்ளனர்.

இதேவேளை மேற்படி குழுவில் ஒத்துப்போகா சர்வதேச பத்திரிகையாளரின் ஊடகக்கூட்டுக் குழுமம், சர்வதேச பிரசுர நிறுவனம், சர்வதேச வெளிப்படுத்துக் குழு மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பவற்றை சர்வதேச ஊடக கூட்டமைப்பின் தூதுக்குழு பிரதிநிதிப்படுத்தியிருந்தது.

இக்குழுவில் அவுஸ்திரேலியாவின் கிரிஸ்தோமர் வாரென், அமெரிக்காவை சேர்ந்த ஸ்கெற்சிறிமென் மற்றும் இந்தியாவின் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் அதன் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.


« PREV
NEXT »