Latest News

February 27, 2015

இருளில் மூழ்குமா பிரித்தானியா?
by Unknown - 0


அபூர்வமான சூரிய கிரகணம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1999ம் ஆண்டு நடந்த இந்த சூரியகிரகணம், 16 வருடங்கள் கழித்து தற்போது நிகழவுள்ளது.

வரும் மார்ச் மாதம் 20ம் திகதி பகல் முழுவதும் இரவாக மாறவிருக்கிறது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை சுமார் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் வடக்கு நோர்வே மற்றும் பரோயே தீவுகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026ம் ஆண்டில் தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். 

எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி நிகழும் சூரிய கிரகணம் காரணமாக பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் மின்சார பிரச்சனை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »