Latest News

November 27, 2014

வீர மறவர்கள் - இவர்கள் எங்கள் இரத்தம்! விசேட அணி தமிழீழ விடுதலைப் புலிகள்!
by Unknown - 0

அன்பான எம் தமிழ் உறவுகளே நவம்பர் 27, தமிழீழ விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை உடல் உள ரீதியாக நினைவு கூரும் நாள்.

விடுதலைப்போராட்ட தீயை ஓங்கி வளர்ப்பதற்கு என்று தங்கள் உடல் உயிர் ஆன்மா குருதியை தாரை வார்த்தவர்கள். ஒவ்வொரு தமிழ் மக்களினதும் பெற்றோர்களாக, சகோதரர்களாக, உடன் பிறப்புக்களாக இருப்பவர்கள். அடிமைப்பட்டு இருந்த தமிழ் மக்களின் முதுகெலும்பை நிமிர வைத்த வீர்கள்.
இவர்கள் கரும்புலிகளாக, ஆகாய கரும்புலிகளாக, கடல்புலிகளாக வேவுப்புலிகளாக, தரைச்சமர்களில் கடல் சமர்களில் மற்றும் வான் சமர்களில் தங்கள் காவியங்களை செங்குருதியால் எழுதிய மறவர்கள்.
காலம் காலமாக ஆண்ட தமிழ் இனத்தை அடக்கி ஆழ நினைத்த சிங்கள் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்ட எண்ணிய சிங்களத்தை அடக்க வீறு கொண்டு எழுந்தவர்கள் எம் தமிழ் வீர மறவர்கள். நேரம் காலம் இடம் பொருள் ஏவல் என்று எதனையும் வேறுபடுத்தி பார்க்காமல் ஈரைந்து மாதங்கள் காவி வளர்த்த உயிரை நஞ்சுக்குப்பியில் காவித்திரிந்தவர்கள்.
தானைத்தலைவனின் ஒரு கண்ணசைவில் பாய்ந்து எதிரிகளை துவம்சம் செய்தவர்கள். இவர்கள் வேறு யாருமல்ல. இந்த மாவீரர்கள் தமிழ் தாயின் மடியில் பிறந்த வீரர்கள். அவர்கள் உங்களின் சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோரே. இவர்களின் ஈகைக்கும் தியாகத்திற்கும் ஈடு இணை ஏதும் கிடையாது.
தமிழீழ விடுதலைப்போராட்டம் தனது காலத்தில் எந்த ஒரு தனி நபரையம் ஆசை காட்டியோ அன்றி கவரவேண்டும் என்று எண்ணியோ போராட்டத்தில் இணைத்துக்கொண்டதில்லை. மாறாக தமிழ் மக்களின் பாரம்பரியம், அடிப்படை உரிமை மற்றும் தேவை என்பனவற்றை உணர்ந்தே இந்த வீரர்கள் தங்களை இந்த விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்தவர்கள் ஆவார்கள்.
இந்த விடுதலைப்போராட்டம் சாதி மதம் பிராந்தியம் மற்றும் கல்வி என்று எந்த ஒரு தனி நபரையும் வேறுபடுத்தி பார்க்காமல் அனைத்து ஆண் பெண் போராளிகளை ஒரே பாதையில் வீறுநடை போடவைத்தது.
இந்த வீர மறவர்கள் தங்கள் வீர மரணத்தின் போதும் தங்களை தாயக மண்ணிற்காகவே அர்ப்பணித்தார்கள் தவிர தனது குடும்பம் தனது சாதி மற்றும் தனது சமூகம் என்று எதுவித வித்தியாசங்களையும் பார்க்கவில்லை. ஆனால் தாயக விடுதலைப்போராட்டத்தில் இணைந்து கொண்ட சில துரதிஷ்டசாலிகள் தங்களின் சுயநலன் கருதியும் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி கருதியும் மாவீரர்களின் தியாகத்தை மாவீரத்தையும் பிழையாக எடைபோட்டு விட்டனர்.
இது போன்ற, கயவர்களின் இந்த வேட்கைக்கு எந்த ஒரு தனி நபரினாலும் பதில் சொல்ல முடியாது ஆயினும் விடுதலைப்போராட்டத்திற்கு தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் தியாகம் அவர்களை ஒருபோதும் தூங்கவிடாது என்பதும் அவர்களின் சந்ததி இந்த தாயக மண்ணில் ஒருபோதும் தலை நிமிர்;ந்து வாழ விடாது என்பதும் திண்ணம்.
இந்த மாவீரர்களின் தியாக வேள்வி தீயில் குளிர்காய எண்ணும் எந்த ஒரு தனி நபரும் தமிழீழத்திற்கு உரியவர் அல்லர். காலங்கள் மாறலாம் நிலமைகள் மாறலாம். ஆனால் காவிய படைப்புக்கள் அழியாது. அழிக்கவும் முடியாது. இலகுவில் மக்கள் மறந்து விடவும் மாட்டார்கள்.
இத்தகைய காவிய படைப்புக்கள் உயிருடன் இருக்கும் வரை அந்த காவியங்களை காயப்படுத்தியவர்களின் கறுப்பு புள்ளிகளும் ஒரு ஓரத்தில் குறித்து வைக்கப்படும்.
எம் தமிழ் மாவீரர்களே ! உங்களின் உயிர் தற்கொடைகள் எதுவும் வீண் போகாது. இது என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் குருதியினால் எழுதப்பட்டது. ஆயிரமாயிரம் துஷ்டர்கள் வந்தாலும் என்றென்றும் தமிழ் மக்களின் முதல் வணக்கம் மாவீரர்களுக்கே உரித்தானது.
நாம் மீண்டும் தலை வணங்குகின்றோம். தலை சாய்க்கின்றோம்.
ஈழம்- தாயகத்து நிலைப்பாடுகள்
40 வருட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர விரும்பிய சிங்கள அரசு, தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் கொத்து கொத்தாக கொன்று குவித்து ஆயுதப்போராட்டத்தை மௌனிக்க வைத்தது. அத்துடன் தமிழர்களை இன்னமும் பாகுபாட்டுடனேயே பார்த்து வருகின்றது.
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இருந்து மக்களின் சர்வதேச முனைப்புக்களையும் புறக்கணிக்கும் வகையில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது. ஒரு பக்கம் யுத்த பாதிப்புக்கள் மறுபுறம் ஆளும் கட்சியின் புறக்கணிப்புக்களுக்கு மத்தியில் எம் தமிழ் சமூகம் தாயகத்தில் பெரும்பாலான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
கடந்த 40 வருட காலத்திற்கும் அதிகமாக சிறுபான்மை தமிழர்களை கருவறுக்கும் முயற்சியில், சிங்களம் தங்கள் கைகளை அகல விரித்து செய்த கொடுரங்கள் ஓராயிரம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.
2009 ஆண்டின் பின்னர் சிறிலங்கா கொடிய ஏவல் அரசினால் கொடுரமாக கொல்லப்பட்ட எமது சமூகத்தினரை நினைவு கூருவதற்கும் கூட தாயகத்தின் பல பகுதிகளில் பற்பல தடைகளை விதித்தும் கட்டுப்பாடுகளை ஏவியும் வருகின்றது. இந்த தடைகளிhல் தமிழர்களின் வேட்கை மேலும் மேலும் உறுதியாவது திண்ணம்.
தமிழர்கள், வடக்கு கிழக்கு தாயக பூமியில் உணர்வு பூர்வமாக ஒன்றிணைவதும் இறந்தவர்களை நினைவு கூருவதும் ஆளும் ஆட்சியினரின் கதிரைகளுக்கும் அவர்களின் சுயலாப செயற்பாடுகளுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதே சிங்களத்தின் அடிப்படை எண்ணமாகும்.
உலகிலேயே தன்னை ஒரு சிறந்த ஐனநாயக நாடாக காட்டிக்கொள்ள விரும்பும் சிறிலங்கா ஏகாதிபத்தியம், தனது நாட்டில் மக்களை ஒன்று கூட அனுமதி மறுப்பது இந்த அரசின் கொடுர சிந்தனை போக்கை காட்டி நிற்கின்றது. அதேவேளை மக்களின் அடிப்படை மனித உரிமையில் கை வைப்பதே ஆகும்.
தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டு, தமிழர்களின் வாழ்வியல் இயல்பு தன்மையை குழப்பும் ஒரு நோக்கமாகவே இருந்து வருகின்றது.. தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருவது தமிழ் ஈழமாகும். தமிழ் ஈழம் என்ற கோரிக்கைக்கு தனித்துவமான பாரம்பரிய வரலாறு பாரம்பரிய தாயக பிரதேசம் ஆகியவற்றை எடுத்துக்காட்டி வருகின்றோம்.
இந்த நிலையில் தமிழர்களின் கோரிக்கை எதிர்காலத்தில் நீடிக்காத வண்ணமும் தமிழர்கள் சாதாரணமான இயல்பு வாழ்வில் கூட மக்கள் ஒன்று கூடாமல் இருக்க வேண்டும் எனும் எண்ணத்திற்காகவே ஆங்காங்கே முகாம்களை அமைக்கவும் தமிழ் மக்களை ஒரு வித பய எண்ணத்தில் அடிமைப்படுத்தி வைத்திருக்கவும் சிறிலங்கா அரசு விரும்புகின்றது.
எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வண்ணம் இந்த ஆக்கிரமிப்பை தனக்கே ஆன பாணியில் கொடுரமாக தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புரிந்து வருகின்றது. 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழ் மக்களுக்கு தான் நல்லது மட்டுமே செய்வதாக காட்டிக்கொள்ளும் சிறிலங்கா, துளியேனும் தமிழ் மக்களுக்கு என்று நல்ல விடயங்களை செய்யவில்லை. இதனை உலகமும் பெரும் அளவில் கண்டுகொள்ளாதது கவலையே.
இத்தகைய புறக்கணிப்புக்களை தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசுக்கு, புலம் பெயர் தமிழ்ர்களே ஒரு பெரும் சவாலாவார்கள். நாம் இதுவரை இழுத்து வந்த விடுதலைப்போராட்ட தேரை தாயகத்து தமிழர்கள் இழுக்க புலம் பெயர் தமிழர்கள் தள்ளிக் கொடுத்துள்ளனர்.
தாயக அரசியல் கட்சிகளின் அரசியல் களம் உறுதியானது
விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களின் தியாகத்தில் அடிப்படையில் தாயக அரசியல் கட்சிகளின் காலத்தினை இரண்டு கட்டமாக பிரிக்கலாம். 2009 ஆண்டின் முன்னரும் பின்னரும்.
2009 ஆண்டின் பின்னர் தனித்து தனித்து வேறு வேறு களங்கள் அமைத்து தமிழ் மக்களின் நலன் கருதி அரசியல் வேலைகளில் ஈடுபட்ட அனைவரும் தற்போது ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு வடம் பிடித்து விடுதலை தேரை இழுப்பது சிறிலங்காவிற்கு ஒரு தலையிடியே.
தாயகத்தில் களம் அமைத்துள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஒன்று திரண்டு சிறுபான்மை தமிழ் மக்களுக்கு என்றொரு தீர்வை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளன.
இந்த அரசியல் போக்கு தமிழ் மக்களின் தேவை என்ன என்று உலகிற்கு பறை சாற்றுவதோடு மக்களின் அரசியல் அபிலாஷைகளை எடுத்தியம்பியுள்ளது. தமிழர் தாயக பகுதியில் வாழும் ஒவ்வொரு வீரத் தமிழ் குடிமக்களும் தங்களின் அரசியல் தேவை தனியான தமிழீழம் தான் என்று காலம் காலமாக உறுதியுடன் உள்ளனர்.
தாயகத்தில் களமாடும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் தேவை என்ன என்று நாடிபிடித்து பணிபுரிந்து வருவது மிகவும் வரவேற்க கூடிய செயலே.
தமிழ் அரசியல் கட்சிகளின் தீர்மானங்களும் அக்கட்சிகளின் அதிரடி நடவடிக்கைகளும் ஆளும் கட்சிக்கு பெரும் பிரச்சனையாகவும் தொலைநோக்கு அடிப்படையில் ஒரு பெரும் போட்டியாகவுமே அவதானிக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கட்சிகளின் இத்தகைய போக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளமையே அக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் பறைசாற்றுகின்றன.
சிறிலங்கா ஆளும் தலைநகரின் தமிழ் மக்கள் மீதான தொடர் அலட்சியம்
மஹிந்த ராஐபக்ச தலமையிலான் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் புறக்கணிப்பதோடு அவர்களின் கோரிக்கையையும் தேவைகளையும் நிராகரித்து வருகின்றது.
மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியலுக்காக நித்தம் தள்ளாடும் போது சிறிலங்கா அரசு சிறுபான்மை தமிழர்கள் மீது 2009 ஆம் ஆண்டில் நடத்திய கொலை வெறி யுத்தத்தையும் இது தொடர்பான தினத்தை வெற்றியாகவும் அறிவித்து வருடா வருடம் வெற்றிவிழா கொண்டாடி வருகின்றது.
இது மட்டுமல்லாமல் வருடா வருடம் இடம் பெறும் சிங்கள படைகளின் இராணுவ கருத்தரங்கில் பன்னாட்டு இராணுவ தளபதிகளை அழைத்து தமிழர்களை அழித்ததனையே பெருமிதமாக காட்டி கொட்டமடிக்கின்றது.
சிறிலங்கா, சர்வதேசம் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்றம் பற்றிய விசாரணைகளை மறைக்க முனைவதோடு தமிழ் மக்கள் மீதும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் பழியினை போட்டு விட்டு தப்பி விடப்பார்க்கின்றது.
வரலாற்றில் பொறியப்பட்ட தமிழ் மக்கள் மீதான இந்த கொலை வெறி தாண்டவம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதுடன் சிங்கள ஆதிக்க அரசின் வரலாற்றிலும் ஒரு கறுப்பு காலமாகவே அமைந்துள்ளது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியான விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் மஹிந்த ராஐ பக்சவும் அவரது சகோதரர்களும் அவர்களது குடும்ப அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்லாமல் பெரும்பான்மை சிங்கள ஏழைக்குடும்பங்களுக்குமே துரோகத்தனத்தை தொடர்ந்தும் செய்து வருகின்றமை மறுக்க முடியாதது.
சிறிலங்கா அரசு புலம் பெயர் தமிழர்களையும் சர்வதேச உலகத்தையும் ஏமாற்றும் விதமாக அவ்வப்போது தமிழ் மக்களுக்கு ஏதாவது சிறு சலுகைகளையும் உதவிகளையும் செய்து கொண்டு உள்ளது. ஆனாலும் மறைமுகமாக நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களின் வாழ்வியலை குழப்பவும், தமிழ் மக்களையும் இல்லாமல் செய்வதும் சிறிலங்காவின் கொடிய நோக்கமாக இருந்துவருகின்றது. இதனை சர்வதேச உலகமும் புலம் பெயர் தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தாயகம் மீதான தமிழக மக்கள் மற்றும் தமிழக கட்சிகளின் அக்கறை
இதேவேளை தாயக தமிழர்களின் தொப்புள் கொடி உறவான தமிழகத்தின் முயற்சிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் புதிய ஆட்சி பீடம் விடுதலைப்புலிகள் எனும் சொல்லை தவிர்த்து தாயக தமிழர்களில் தங்கள் நலனை காட்டி வருகின்றது. அந்த ஆட்சி பீடம் தேசிய அளவில் ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல் அழுத்தங்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியது அவசியமே. ஆயினும் மக்களின் துன்பங்களை தவிர்க்காமல் உள்ளமை வரவேற்கத்தக்கது.
இந்த வழியில் தமிழ் ஏனைய கட்சிகள் தமிழீழத்தில் அவ்வப்போது நிகழும், தமிழ் மக்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு தங்கள் எதிர்ப்பையும் காட்டி வருகின்றனர். இது தாயக தமிழ்ர்களுக்காக �நாங்கள் இருக்கின்றோம்� என்று கூறும் ஒரு நம்பிக்கை செயற்பாடு என்றால் மிகையாகாது.
தமிழக அரசியல் கட்சிகள் தமிழகம் தவிர்ந்த ஏனைய பிற மாநிலங்களிலும் தங்கள் வரலாற்று எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றமை அந்தந்த மாநில அரசுகளுக்கு ஈழத்தமிழர் விடயங்களை தெளிவு படுத்தும் என்பதும் விடுதலைப்புலிகளின் திடமான நம்பிக்கையாகும்.
இந்தியாவின் நிலைப்பாடு
தாயக தமிழர்களை பழிவாங்க துடித்துக்கொண்டிருந்த பிரதான இந்திய அரசியல் கட்சியை மக்கள் பதவியிறக்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் தேவையற்ற முறையில் தமிழகத்தின் எதிர்ப்பையும் தலையீட்டையும் புறந்தள்ளும் முகமாக சிங்கள பெரும்பான்மை அரசுடன் கைகோர்த்து இராணுவ பயிற்சி என்றும், தொழில்நுட்ப உதவியென்றும் ஒப்பந்தம் என்றும் அணிதிரண்டது இந்த முன்னைநாள் டெல்லி அரசு.
இந்த நிலையில் தமிழக மக்களின் பூரண வெறுப்;புக்கு உள்ளான பழைய டெல்லி அரசு தனது நாட்டில் தனது மக்களையே கவனிக்க தவறியிருந்தது.
தொடர்ந்தும் உள்நாட்டில் ஏற்பட்ட ஊழல்கள் விலைவாசி அதிகரிப்பு ஆகியவற்றை கவனிக்க தவறியது. உன் நண்பனை கூறு உன்னை நான் கூறுகின்றேன் எனும் முதுமொழிக்கு ஏற்ப இந்திய மத்திய அரசின் சிறந்த கூட்டாளியாக சிறிலங்கா இருந்தமையே பழைய அரசு பதவியிறக்கப்பட்டமைக்கு இன்னும் ஒரு காரணமாகும்.
இந்தியாவின் புதிய அரசு ஈழத்தமிழர்களின் நலனில் கொண்டிருக்கும் அக்கறை ஒரு காலமும் குறைந்துபோகாது என்றும் ஆளும் தரப்பின் தமிழக உறுப்பினர்கள் கூறி வருகின்றமை மிகவும் வரவேற்க தக்கவிடயமே.
தமிழ் மக்கள் மீதான மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு
சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் மாறுபட்டதே. ஆயினும் வேறு பல காரணங்களுக்காகவும் வேறு பல தீவிரவாத அமைப்புக்களின் போக்குகளினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் தீவிரவாத அமைப்பாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கைத்தீவிலும் சரி சர்வதேச நாடுகளிலும் சரி எந்த ஒரு தீவிரவாத செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை.
இலங்கை தீவில் மட்டுமே விடுதலைப்புலிகள் தங்கள் போராட்ட களத்தினை வைத்திருந்தனர். இந்த போராட்ட களமும் மிகவும் நேர்மையான களமாகவே அமைந்திருந்தது. அத்துடன் விடுதலைப்புலிகள் தங்கள் அரசியல் வேலைத்திட்டங்களை மட்டுமே சர்வதேச அரங்கில் விரிவுபடுத்தியிருந்தனர்.
ஆனால் சர்வதேச அளவில் இயங்கி வரும் சில அமைப்புக்கள் மேற்கொண்ட ஆயுத போராட்டத்தினாலும் வித்தியாசமான எச்சரிக்கைகளினாலும் ஆசிய கண்டத்தில் தமிழ் மக்களின் நாடித்துடிப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக உருவகப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது. இந்த முடக்கம், ஒரு நிரந்தர முடக்கமாகவே போய்விட்டது.
ஆயினும் தமிழ் மக்களின் ஐனநாயக தேவை என்ன என்பதனை வெளியுலகிற்கு எடுத்தியம்பவேண்டியது ஒரு அத்தியாவசிய தேவையே. தமிழ் சமூகம் வெளியுலகிற்கு எடுத்துக்கூற வேண்டியிருந்தது. தமிழ் சமூகம் செய்ய வேண்டிய அந்த தலையாய பணியினை இன்று ஐக்கிய நாடுகள் சபை செய்துகொண்டிருக்கின்றது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை அரசிடம் சரணடைந்தமையின் ஒரு காரணம் நீதி மன்றின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சனை வெளியுலகிற்கு கொண்டுவரவேண்டியதே. ஆனால் சரணடைந்த விடுதலைப்புலிகளை இல்லாமல் செய்ததன் மூலம் தமிழ் மக்களின் குரல்களை அடக்கிவிடலாம் என்று சிறிலங்கா கண்ட கனவு பலிக்காமல் போய்விட்டது.
2009 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கும் விடுதலைப்புலி போராளிகளுக்கும் எதிராக அமுல் படுத்தியிருந்த வன்முறைகள் வார்த்தைகளால் கூற முடியாதவை.
கொலைகள், கூட்டுக்கொலைகள், ஆட்கடத்தல்கள், பணம் பறிப்புக்கள், பொருளாதார தடைகள், கட்டவிழ்க்கப்பட்ட புறந்தள்ளுதல்கள் பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றை பதிவு செய்யும் காலம் கனிந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிகைள் பேரவையில் பதிவு செய்வதே இலங்கை அரசினை சர்வதேச விசாரணைக்கு இட்டு செல்லும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.
தமிழர்களின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக்குழுவின் முனைப்புக்களை தமிழ் மக்களுக்கும் எங்களின் விடுதலைப்போராட்டத்திற்கும் கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். இதுவே கடந்த 40 வருடகாலமாக நாம் கடந்து வந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.
நாம் இலங்கைக்குள் பிளவு பட்ட தமிழீழம் கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றோம். நாம் இலங்கையினுள் தேசிய ரீதியில் இந்த பிரச்சனையை தீர்த்துக்கொள்ளவே விரும்பி போராடினோம். ஆனால் எம்மீது வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து எமது பிரச்சனையை சர்வதேச அளவில் சிறிலங்கா அரசு கொண்டுவந்து விட்டுள்ளது.
நாம் கடந்த காலங்களில் பட்ட துன்பங்கள் இப்போது கனிந்துள்ளளது.
இது எம் விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரையும் உடலையும் மண்ணுக்கும் தமிழுக்கும் அர்ப்பணித்த மாவீரர்களின் தியாகம் ஒன்றே இந்த வெற்றிக்கு காரணமாகியுள்ளது.
இந்த வீரர்கள் எங்கள் தமிழ் உறவுகளே. இவர்கள் உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளே. தாயகத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்க எண்ணி, சிறிலங்கா கொடும் கோலரசு கடந்தகாலங்களில் மேற்கொண்டிருந்த சர்வதேச ரீதியிலான எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது பொலிவிழந்துபோய்விட்டது.
சர்வதேசம் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது. இந்த தடை பொலிவிழந்தமை மற்றும் காலவாதி அடைந்தமைக்கு காரணம் எம் தமிழ் மக்களின் தியாகங்களும் அர்ப்பணிப்புக்கள் தான் என்றால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். தமிழ் மக்களின் தியாகத்தின் பிரதிபலிப்பாகவே ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் -தமிழீழ விடுதலைப்புலிகளின்- மீதான தடையினை நீக்கியுள்ளது.
கடந்த காலத்தில் நிலவிவந்த சிறிலங்காவின் போலி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு சிறிலங்கா அரசு செலவு செய்த பணம் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் பிரமாண்டமானவையாகும். மேலும் இந்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் எங்கள் தமிழ் சமூகத்தினரையே தமிழ் மக்களுக்கு எதிராக பாவித்து வந்தமையும் அந்த நபர்கள் அற்ப சொற்ப சலுகைகளுக்காக தங்கள் இனத்தை அடகு வைத்தமையும் வரலாற்றில் மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயலாகும்.
இந்த நிலையில் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளமை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தடை நீக்க தீர்ப்பு சர்வதேச அளவில் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதோடு தாயகத்தில் பல இழப்புக்களை சந்தித்து அகிலமெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த தீர்ப்பு கடந்த 2009 ஆம் ஆண்டின் முன்னர் நீக்கப்பட்டிருப்பின் தாயகத்தில் விடுதலைப்போராட்டத்தில் ஒரு கடுமையான மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
எமது விடுதலைப்போராட்டத்திற்கு சர்வதே ரீதியில் மாறுபட்ட ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கும். தலமை விரும்பியமை போன்று எமது போராட்டம் ஒரு சர்வதேச ரீதியில் ஒரு படிநிலை தாண்டி 2009 ஆண்டு யுத்தம் எங்களால் ஆயுத ரீதியிலும் வெற்றிகொள்ளப்பட்டிருக்கும். ஆனால் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடை நீக்கமும் சர்வதேசத்தில் எம்மை அடையாளப்படுத்தி அங்கீகாரம் கொடுத்துள்ளது.
எமது தாயக விடுதலைப்போராட்டத்தில் பிழையாக வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழ் மக்களின் உயிரை குடிக்க ஏதுவா அமைந்தமை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒரு கறுப்பு அத்தியாயமே.
எனவே எமது மக்களின் அர்ப்பணிப்புக்கள் வீண்போகாத அளவில் தற்போது தடை நீக்கப்பட்டமை எமது விடுதலைப்போராட்டத்தை அடுத்த படி நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. இவர்களின் தியாகம் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் வெற்றி மட்டும் அல்ல. உலக தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு முக்கியமான விடுதலைப்போராட்டமாகும்.
புலம் பெயர் தமிழ் மக்களின் அக்கறையும் ஒரு சிலரின் தன்னிச்சை போக்கும்
புலம் பெயர் தமிழ் சமூகம் தாயகத்து தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள உறவே இன்றும் உலகமெங்கும் பேசப்படுகின்றது. விழ விழ எழுவோம் என்று தாயகத்து தமிழ் மக்களுக்கு எமது உறவுகள் கொடுக்கும் உதவிகள் அளப்பரியது.
சிறிலங்கா தரப்பு தாயகத்தில் தமிழ் மக்களை முற்றிலும் கைவிட்ட நிலையில் போர் பாதிப்புக்களுக்கு உள்ளான மக்களுக்கு எமது உறவினர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் புலம் பெயர் நாடுகளில் சிலர் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதாக கூறி பெருமளவு பணத்தினை சேகரிப்பதும் அதனை மக்கள் தேவைக்கு பாவிக்காமல் தங்களின் சொந்த தேவைகளுக்கு பாவித்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் மக்களுடைய தேவைகள் கைவிடப்பட்டு மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளமை கண்டிக்கதக்கது.
2009 ஆண்டின் முன்னர் ஒரு நிர்வாகத்தின் கீழ் மிகவும் திறம்பட பாரிய கட்டமைப்புக்களை செய்து வந்த விடுதலை இயக்கம் தற்போது கொண்டுள்ள சிறு சிறு கருத்து முரண்பாடுகள் மற்றும் ஏமாற்ற குணங்கள் ஆகியவைற்றினால் தனித்து இயங்கி வருவது மேலும் எம் தமிழ் மக்களுக்கு மட்டுமே பாதிப்பை கொடுத்து வருகின்றது.
இந்த தனித்து நிற்கும் போக்கு முற்றிலும் ஒழித்துக்கட்டப்படவேண்டியதே. எமது தமிழ் சமூகத்திற்கு பிரயோசனமாக அமையாது மாறாக எதிரிகளுக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிடும்.
30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த துப்பாக்கிகள் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனித்தபோது எமது விடுதலைப் போராட்டம் எதாவது ஒரு வகையில் மிகவும் சிறந்த முறையில் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டு மக்களின் விடுதலை நோக்கி நகரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும் வரலாற்றில் இடம்பிடித்துள்ள விடுதலைப்புலிகளின் யுத்தம் அறவே மழுங்கிவிடும் என்று எதிர்பார்த்து அற்ப சொற்ப விடயங்களுக்கு ஆசைப்பட்டு பாதை மாறிச் செல்லும் அற்பர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவே அமைகின்றது.
எமது இனத்தின் விடுதலைப்பயணம் மிக விரைவில் தான் சென்றடையே வேண்டிய இலக்கினை அடையும் போது வரலாற்று தவறுகள் செய்பவர்களும் அவர்கள் தம் சந்ததியும் தலை குனிவை சந்தித்து எம் தமிழ் மக்கள் உறவுகளால் புறந்தள்ளப்பட கூடாது என்பதே எமது விருப்பம்.
நீண்ட காலமாக போராட்ட தேரை வடம் பிடித்து இழுத்தவர்கள் ஏதோ இனம்புரியாத காரணத்தினால் தடம் மாறி செல்வது அனுமதிக்க முடியாதது.
உலக தமிழர்கள் ஓன்று திரள வேண்டும்
தாயக விடுதலைக்காகவும் எம் தமிழ் மக்களின் சுதந்திர விடியல் தேடி களமாடி உயிரை நீத்த மாவீரர்களை நினைவு கூரும் இன்றைய நாட்களில் நீங்கள் அனைவரும் உங்கள் மனங்களில் சுதந்திர தமிழீழத்திற்காக என்ன செய்தீர்கள் என்பதனை மீட்டி பார்க்கவும் வேண்டப்படுகின்றீர்கள்.
2009 ஆண்டின் பின்னர் சிறிலங்கா அரசு எம் தமிழ் சோதரங்கள் மீது மேற்கொண்டு வரும் பல்வேறு பட்ட மறைமுக வேலைத்திட்டங்களால் நாம் அனைவரும் எம்மை அறியாமலேயே பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றோம். இந்த இன்னல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
இந்த பிரிவுகள் என்பது நிரந்தரமல்ல. மிகவிரைவில், நாம் அடையவுள்ள, இலக்கு நோக்கிய நடைப்பயண தாயக விடுதலைப்போரில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம். நிச்சயம் எமது விடுதலைப்போர் மீள் வேகம் கொள்ளும் சர்வதேச மயப்பட்ட அளவில் பேசப்படும்.
தமிழர்கள் மீது சிறிலங்கா விதித்துவரும் கடுமையானதும் மிகவும் மோசமானதுமான இன்னல்கள் ஆதவனைக்கண்ட பனிப்புகார்போல விலகுவது திண்ணம். ஆனால் எமது தமிழ் ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக, காளான்கள் போல் அங்கு ஒன்றுமாய் இங்கு ஒன்றுமாய் முளைத்திருக்கும் துரோகிகளும் எதிரிகளும் நிச்சயம் அழிந்துபோவார்கள்.
அழிக்கப்படுவார்கள். அவர்களின் சந்ததி மிகவும் கொடிய பழிச்சொல்லுக்கு ஆளாகும். எமது சமூகத்திற்கு எதிராக திரும்பியவர்கள் எமது விடுதலைப்போராட்டத்திற்கு வித்தாகி விருட்சமாகிய மாவீரர்களின் முன்னால் புல்லாகி போவார்கள். மாவீரர்களின் தியாகம் மாறாது, அழியாது.
சில நாடுகளின் சர்வதேச மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகள் தாயம் மீது செலுத்தும் எதிர்மறையான செல்வாக்குகள்
தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது தனக்கே உரிய பாதையில் வீறு நடைபோட்டு சென்று கொண்டிருந்த வேளையில் வேறு பல நாடுகளில் நிலை கொண்டிருந்த சர்வதேச பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்று வகைப்படுத்தப்பட்ட அமைப்புக்களுடன் தாயக விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட்டமை எமது விடுதலைப் போரிற்கு ஒரு இருண்ட காலமே.
சர்வதேச அளவில் இயங்கிக் கொண்டிருந்த சில அமைப்புக்கள் தங்கள் நாடு தவிர்ந்த வேறு பல நாடுகளில் கொண்ட தீவிரவாத செயல்பாடுகள் அந்த அமைப்புக்கள் மீதான வல்லரசுகளின் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கு செலுத்த வைத்தன.
ஆனால் விடுதலைப் புலிகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தங்கள் போராட்ட களத்தினை சர்வதேச அளவிற்கு விரிவு படுத்த முனைந்தது இல்லை. ஆனால் சிறிலங்கா அரசு விரித்த கொடிய மாய வலையில் சர்வதேசம் சிக்கிக்கொண்டமை எப்படி ? ஏன் ? என்பது இன்னமும் தமிழ் மக்களுக்கு புரியவில்லை.
ஆனால் 2009 ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சர்வதேச உலகம் சிறிலங்காவுடன் கைகோர்த்தமை மிகவும் பாரதூரமான குற்றத்திற்கு வழிவகுத்தது. இந்த குற்ற செயலுக்கு பரிகாரமாகவே சிறிலங்காவை சர்வதேசம் தனது அணியில் இருந்து தற்போது கழற்றிவிட்டுள்ளது.
பாரியதும் ஏராளமான சிறப்பு பண்புகளை கொண்ட தமிழ் இனத்தை அழிப்பது என்பது எந்த ஒரு நாட்டினாலும் செய்துவிடமுடியாது. ஆயினும் தமிழ் மக்களின் புத்திக்கூர்மையும் பாரம்பரியமும் இந்த பூவுலகில் இருந்து மறைத்துவிட முடியாத சூழலில் உலக நாடுகள் மீண்டும் தமிழர்களுக்கு கைகொடுக்க ஆரம்பித்துள்ளன.
இன்றைய இந்த சர்வதேச அளவில் அடையாளம் காணப்பட்ட எமது தேவையினை பூர்த்தி செய்ய, எமது பாதையில் இருந்து விலகிச்சென்றுள்ள புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களும் தாயகத்தில் உள்ளவர்களும் அனைவரும் மீள ஒருங்கிணைந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் நாங்கள் மாவீரர் தியாகத்தையும் தாயக தமிழர்களையும் தியாகத்தையும் மறந்துவிடமாட்டோம். என்றென்றும் மாவீரர்கள் தியாகம் நிலைத்திருக்கும்.
தாயகம் மலரும். கனவு நனவாகும்
விசேட அணி தமிழீழ விடுதலைப் புலிகள்
« PREV
NEXT »