Latest News

September 23, 2014

அதிர்ந்தது ISIS இருப்பிடங்கள்
by admin - 0

நேற்றைய தினம் இரவு சிரியாவின் எல்லைப் பகுதியில், பாரிய தாக்குதல் ஒன்றில் அமெரிக்க வான்படையும் கப்பல் படையும் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு மேலதிகமாக 5 அராபிய நாடுகள் தமக்கு உதவியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஒரே இரவில் சிரியாவின் எல்லைப் புறத்தில் உள்ள. ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைமீது பாரிய ஏவுகணைகளை கொண்டு அமெரிக்கா தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. அமெரிக்க கடற்படைக் கப்பலில் இருந்து லேசர் மூலம் வழிநடத்திச் சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை அது ஏவியுள்ளது.



மேலும் அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமனம் கொடுத்த தகவலுக்கு அமைய , அமெரிக்க வான் படையும் பாரிய தாக்குதலை தரையில் நடத்தியுள்ளார்கள். இரவு நேரம் முழுவதும் பாரிய வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும். பெரும் அதிர்வலைகள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. குறித்த இந்த இயக்கத்திற்கு பாரிய அழிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை எந்த சேத விபரங்களையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். தரையில் இருந்த அமெரிக்க உளவு பார்கும் பிரிவினர், தாக்குதல் பகுதி மீது லேசர் ஒளிவீச்சை ஏவிய பின்னரே, லேசர் ஒளிவீச்சை பிந்தொடர்ந்து தாக்கும் ஏவுகணைகளை கப்பலில் இருந்து அமெரிக்க படைகள் ஏவியுள்ளது என பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது. இந் தாக்குதல் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிககளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

« PREV
NEXT »