Latest News

June 13, 2013

இலங்கை ஜனாதிபதிக்கான அதிகாரம் பறிப்பு உலக மகா அரசியல் நாடகம் இலங்கையில்- சரவணை மைந்தன்
by admin - 0

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.


இலங்கை அரசின் மிகப்பெரிய ஒரு அரசியல் நாடகத்தை தற்பொழுது அரங்கேற்றியுள்ளது அதாவது மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஸ்ரீலங்காவின் அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதன் ஜனாதிபதிக்கு இருந்தது அதை தற்பொழுது இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீக்கியுள்ளது இலங்கை அரசு இது செய்வதற்கு என்ன காரணம்?மிகப்பெரிய அரசியல் தந்திரத்தை இலங்கை ஜனாதிபதியும் அவரின் பரிவாரங்களும் நிகழ்த்தியுள்ளன. 13 வது அரசிய திருத்தம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு ஒரு சிறு துளி அரசியல் உருமையை வழங்கிறது .இந்த 13வது அரசியல் திருத்த சட்டம் இலங்கை மற்றும் இந்திய நாடுகளால் உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு இணைத்த மாகாணங்களாக ஆக்கி அதற்கு சில குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் இல்லாவிடிலும் மிகவும் குறைந்த ஒரு அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆனால் இந்த திருத்த சட்டத்தை தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளும் ஏற்கனவே நிகரித்து இருந்தார்கள் ஆனால் EPRLF மட்டும் இதை ஏற்று வடக்கு கிழக்கு மாகாணத்தை கைப்பற்றி வரதராஜ பெருமாள் முதலமைச்சராக வந்தார் ஆனால் இந்த அதிகாரமற்ற மாகாணசபையை முதலமைச்சராக இருந்த அவர் எதுவும் பலனில்லை தமிழீழமே தீர்வு என்று அறிவித்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார். இப்படியான வரலாற்றை கொண்ட இந்த 13வது அரசியல் சட்டம் தற்பொழுது மீண்டும் இலங்கை மற்றும் இந்தியா அரசுகளால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் தற்பொழுது இரண்டாக்கப்பட்டு கிழக்கு மாகாணம்,வடக்கு மாகாணம் என பிரிக்கபட்டுள்ளது கிழக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது அடுத்து பலகாலமாக தேர்தலை சந்திக்காத வடக்குக்கு தேர்தல் நடத்தும் இலங்கை அரசின் நாடகம் அரங்கேற்றம் நடைபெறம் இத்தருணத்தில் மாகாணங்களுக்கான ஆதிகாரன்களை குறைத்து தேர்தலை வைக்குமாறு இனவாத குழுக்கள் வேண்டுகோளுக்கு இணங்க அதற்க்கான அதிகாரங்களை குறைக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசு தற்பொழுது அரங்கேற்றியுள்ளது. இதில் ஒரு பெரும் நாடகமாம் இலங்கை ஜனாதிபதிக்கு இருந்த மாகாணங்களை இணைக்கும் அதிகாரத்தை அவரிடம் இருந்து எடுத்துள்ளது இது ஒரு பெரும் அரசியல் நாடகம் அதாவது தனியொரு நபரிடம் மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் இருக்குமாயின் அவர் எதையும் சொல்லி தப்பிக்க முடியாது உலக நாடுகள் 13வது அரசியல் சட்டத்தை ஆதாவது மிகவும் குறைந்த அதிகாரத்தை உடைய தீர்வை வழங்குங்கள் என்று மகிந்தவுக்கு கூறினால் மகிந்த சொல்லுவார் என்னிடம் அதிகாரம் இல்லை அமைச்சரவையை கூட்டி அல்லது பராளுமன்றத்தி கூட்டித்தான் அவர்களுடைய சம்மதம் பெறவேண்டும் என்று ஒரு பந்தை எறிவார் பின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை நான் என்ன செய்ய என்று உலகநாடுகளிடம் தப்பித்து கொள்வார். இதுதான் இலங்கை அரச இயந்திரத்தின் நாடக அரசியல். இதிலிருந்து உலக நாடுகளுக்கு ஒரு தகவல் தெரிந்திருக்கும் உலக நாடுகளே புரிந்து கொள்ளுங்கள் இதுதான் தமிழர்களின் குரல் சிங்களம் சிறிய ஒரு அதிகாரத்தை கூட பகிர்ந்து கொள்ளாது தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள

சரவணை மைந்தன்

தொடர்புடைய செய்தி


இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும்.
இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, ஜூன் 18ஆம் திகதி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும்.
இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்தரச் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் இதனை அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புக்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்வதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments