Latest News

April 11, 2013

பலிக்கடவாக கருணா ?
by admin - 0



இறுதி யுத்த நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மூத்த போராளிகளை வடிகட்டுவதினில் கருணாவே முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இறுதி யுத்த நடவடிக்கைகளினில் பங்கெடுத்த படை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல்கள் பிரகாரம் சரணடைந்தவர்களது பெயர்பட்டியல்கள் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையினில் தடுத்து வைத்திருக்கப்படவேண்டியவர்கள் மற்றும் தீர்த்துக்கட்டப்பட வேண்டியவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் தடுத்து வைக்கப்படவேண்டியவர்கள் தொடர்பான பட்டியலில் நூற்றுக்கும் குறைவானவர்களது பெயர்களே இருந்ததை தான் கண்டிருந்ததாக அப்படை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் அகப்பட்டுக்கொண்ட பாலச்சந்திரன் சரண் அடைந்திருக்கவில்லையென தெரிவித்த அப்படை அதிகாரி நிராயுதபாணியாக அகப்பட்டுக்கொண்டதாகவே தெரிவித்தார்.எனினும் பாலச்சந்திரன் படுகொலைக்கான ஆலோசனையினை கருணாவே வழங்கியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட அவ்வதிகாரி அப்போது பெரும்பாலும் கோத்தா அனைத்திற்கும் கருணாவின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட வேண்டியவர்கள் தவிர்த்து ஏனையவர்கள் வேறு பிரிவு படை அதிகாரிகளிடம் கையளித்ததாக தெரிவித்த குறித்த படை அதிகாரி அவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் பற்றி கூறமுடியாதிருப்பதாகவும் கூறினார்.

எனினும் சரணடைந்தவர்களுள் பலர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் ஊடாக படையினரால் கூட்டிச்செல்லப்பட்டு தேவையான தகவல்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எது எவ்வாறாக இருப்பினும் சரண் அடைந்தவர்களது நிலையினை அறிந்தவர்களுள் கருணாவும் ஒருத்தரென சுட்டிக்காட்டிய அவர் மகிந்த கும்பல் ஓரு வேளை போர்குற்றவாளிகளென அறிவிக்கப்படுமிடத்து அவர்களது பலியாடாக கருணாவே நிச்சயமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments