Latest News

July 16, 2011

ஒபாமாவை கொல்லத் திட்டமிட்டிருந்த ஒசாமா: திடுக் தகவல்
by admin - 0

அமெரி்க்க அதிபர் பாரக் ஒபாமாவைக் கொல்ல அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. 

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவையும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரி்ககப் படைத் தலைவர் ஜெனரல் டேவிட் பெட்ரஸையும் கொல்லத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒசாமாவின் அப்போத்தாபாத் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. 

ஒபாமாவும், பெட்ரஸும் சேர்ந்து ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதியில் விமானத்தில் செல்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று அந்த ஆவணங்களில் உள்ளது.

விரைவில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவிருக்கும் பெட்ரஸ் மற்றும் அதிபர் ஒபாமாவைக் கொல்ல அல்கொய்தா விரும்புவதாகவும் அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சேனல் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தன்று அமெரி்ககாவை தாக்க அல் கொய்தா தலைவர் பின் லேடன் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டது.
« PREV
NEXT »

No comments