Latest News

May 25, 2011

வைக்கோல் பெட்டி
by admin - 1

வைக்கோல் பெட்டி என்ற எளிய குறைந்த செலவிலான எரிபொருள் சேமிப்பு சாதனத்தை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மனையியல் விரிவாக்கத்?துறை (மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை) உருவாக்கியுள்ளது. இப்பெட்டியில், வெப்பம் உள்ளிருந்து வெளியேறுவது தடுக்கப்பட்டு வெப்ப ஆற்றல் சேமிக்கப்பட்டு, உணவு பொருட்களைச் சமைப்பதற்கும், சூடு ஏற்றுவதற்கும் உதவுகிறது. வைக்கோல் பெட்டியில், உள்ளூரில் கிடைக்கக்கூடிய வைக்கோல் மற்றும் உமி போன்ற வேளாண் கழிவுகள் உபயோகப்படுத்தப்படுகிறது.

வைக்கோல் பெட்டி வடிவமைத்தல்:
கீழ்க்கண்ட அளவில் பெட்டி அமைக்கப்பட வேண்டும். நீளம்-45 செ.மீ., அகலம்-45 செ.மீ., உயரம் -45 செ.மீ. மரப்பெட்டி, கார்ட்போர்டு பெட்டி, மூங்கில் கூடை, சிமென்ட் தொட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வடிவமைத்தல்: கார்ட்போர்டு பெட்டியை தயாராக வைக்கவும். பெட்டியில் வைக்கோல் நிரப்பவும். பெட்டியின் அளவைப்போல் உள்ள சணல் பையில் வைக்கோல் நிரப்பவும்.

சமைக்கும் முறை (உதாரணம் - அரிசி)
* கழுவிய அரிசியை பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
* இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றவும்.
* 10 நிமிடம் அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும்.
வைக்கோல் பெட்டியின் நடுவில் பாத்திரம் வைக்கும் அளவிற்கு இடத்தை ஏற்படுத்தவும்.
* அடுப்பில் இருந்து பாத்திரத்தை எடுத்து வைக்கோல் பெட்டியில் வைக்கவும்.
* பெட்டியை வைக்கோல் நிரம்பிய சணல் பை கொண்டு மூடிவைக்கவும்.
* வைத்து 45 நிமிடத்திற்குள் அரிசி நன்கு சமைக்கப்பட்டும் (5-6 மணி நேரம் வரை சூடாக இருக்கும்).

நன்மைகள்:
* பாதுகாப்பானது, கையாளுவதற்கு எளிய முறை.
*குறைந்த செலவு
* சுலபமான பராமரிப்பு முறை
* சமைப்பதற்கு குறைவான நேரமே ஆகிறது.
* வெப்பநிலை பராமரிப்பு: தேவைப்படும் வெப்ப அளவை 6 மணி நேரத்திற்கு தக்கவைக்க முடியும். சமைக்கப்பட்ட அரிசியை 61 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 5 மணி நேரம் வரை வைக்கோல் பெட்டியில் வைக்கும்போது பராமரிக்கலாம். ஆனால் வெளியில் வைக்கும்பொழுது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையே பராமரிக்க முடிகிறது.
* உயர்தர உணவு வகைகள்: இம்முறையில் தயாரிக்கப்படும் உணவு, மற்ற முறையில் சமைக்கப் படுவதைக் காட்டிலும் மணம், நிறம், பதம், சுவை ஆகியவற்றில் நல்ல தரம் வாய்ந்ததாக உள்ளது.
* குறைந்த அளவு ஊட்டச்சத்து இழப்பு: சமைக்க பயன்படுத்தும் நீர் முழுமையாக பயன்படுத்தப் படுவதால் குறைந்த அளவு ஊட்டச்சத்தையே இழக்கிறோம். மூலப்பொருட்களை சேமிக்க முடிகிறது.
* இம்முறையில் எரிபொருள், பணம், நேரம், ஆள் செலவு ஆகியவற்றை சேமித்து, சுகாதார கேடுகளையும் தடுக்க முடிகிறது. 58% சமைக்கும் நேரமும், 44% எரிபொருளுக்கான பணமும் சேமிக்கப்படுகிறது.








« PREV
NEXT »

1 comment

Unknown said...

வைக்கோல் பெட்டி சம்பந்தப்பட்ட ஏதாவது காணொளி உள்ளதா??