Latest News

December 14, 2010

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்? கொழும்பிலிருந்து விலங்கியல் நிபுணர்கள்:-
by admin - 0


யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து விலங்கியல் நிபுணர்கள் படையெடுத்திருக்கின்றனர். இலங்கை மிருக காட்சிசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் குழுவொன்றே யாழ்ப்பாணம் சென்றுள்ளது.
எனினும் இது திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்ட கணணி போட்டோ சொப் மூலமான புகைப்படமே என ஆதாரங்களுடன் வல்லுனர்கள் கூறுகின்றனர். கொழும்பிலிருந்து வெளிவருகின்ற தேசிய நாளிதழ் ஒன்று தனது அடுத்தடுத்த பதிப்புகள் இரண்டில் பத்து தலை நாகம் தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தது. எனினும் உள்ளுரில் இது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது

திட்டமிட்ட வகையில் வர்த்தக நோக்கம் கருதியதாக புற் தரையின் மத்தியில் ஒரு பத்துத்தலை நாகம் ஒன்று இருப்பதைப் புகைப்படம் மூலம் எடுத்து குடாநாட்டில் 10 முதல் 50 ரூபா வரை விற்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று பலரது கைத்தொலைபேசிகளுக்கும் கட்டணம் அறவிடப்பட்டு இது பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இது திட்டமிட்ட வகையில் வர்த்தக நேக்கில் பரப்பப்பட்டு வருவதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் அலட்டிக் கொள்ளாது கொழும்பு தேசிய நாளிதழ் ஒன்று பத்து தலை நாகம் நடமாடுவதாக செய்திகளை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நேற்றைய தினம் கொழும்பிலிருந்து நிபுணர்கள் குழுவொன்று சென்று தேடுதல்களை நடத்தியிருந்தது.
சுழிபுரம் பகுதியில்; இது தொடர்பில் தங்கியுள்ளவர்கள்; கருத்துக் கூறிய பொழுது இது தொடர்பில் தலைமை அலுவலகமே கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் தமது முயற்சி இதுவரை வெற்றி பெற்றிருக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.குறித்த 10 தலைநாக பாம்புகளைக் கண்டதாகக் கூறியவர்கள் தொடர்பில் தேடுதல்களை மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட போது அவ்வாறு தாம் எதனையும் கண்டிருக்கவில்லை எனவும் தகவல்களையே அறிந்ததாகவும் மாறி மாறிக் கூறி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இது திட்டமிட்ட வகையில் கணணி மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியாக இருக்கலாம் என்றே அவதானிகள் கூறுகின்றனர்.

« PREV
NEXT »

No comments