Latest News

July 19, 2016

தமிழர் ஊடகங்களின் விபச்சாரம்.!! -மனச்சுமையுடன் துரோணர்
by admin - 0

தமிழர் ஊடகங்களின் விபச்சாரம்.!!

முதலில் ஐந்து செய்திகளை பாப்போம். பின் எனது பதிவுக்கு செல்வோம்.

நிசாந்த சிறி வர்னசிங்க=செய்தி-1
**************************************************
நல்லிணக்கத்திற்கு சிங்கள மக்கள் தேவைக்கு அதிகமாகவே அர்ப்பணிப்பு செய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் அர்ப்பணிப்பினையோ முன்னுதாரணத்தையோ வழங்கத் தவறியுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன்=செய்தி-2 
*****************************************
யாழ். பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகளே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பில் நான் மிகவும் வருந்துகின்றேன். இவ்வாறான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.

செய்தி-3 
***************
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விடயங்களை அறிவதற்காக 3 அமைச்சர்கள் கொண்ட குழு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
செய்தி-4
**************
யாழ். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வடக்கில் தற்போதும் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றைய தேர் திருவிழாவின் போது ஆலயத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

இவ்வாறு வருகை தந்த இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பக்தர்களுடன் இணைந்து வடம் பிடித்து தேரும் இழுத்துள்ளனர்.

தமது மேலாடைகளை கலைந்து விட்டு, தமது காலணிகளை கழட்டி விட்டு பக்தர்களுடன் இணைந்து இராணுவத்தினர் தேரினை இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி-5
***************
புலம் பெயர்ந்த மக்களின் நிதியில் புலிகளால் தோற்றுவிக்கப்படட  IBC புதிய பாதையில் பயணிக்கின்றது. நேற்று முன்தினம் தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பி உள்ளனர்.

அன்பு நண்பர்களே...
*******************************
மேலே நான் குறிப்பிடடவை இந்த வாரம் இரண்டு நாட்களுக்குள் வந்த செய்திகள். இந்த செய்திகளை பார்த்தால் எல்லாவற்றுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. 

அதாவது சிங்கள அரசையும், அதன் இராணுவத்தையும் புனிதர்களாக்கி, அவர்கள் தமிழர்களின் நலனில்அக்கறை உள்ளவர்கள் போல ஒரு மாய தோற்றத்தை உண்டாக்க விளைகின்றார்கள்.!

2009போர் முடிவின் பின்னர் சிங்கள அரசு, தமிழர் தேசத்தில் சிறப்பாக செயல்பட்ட  தமது புலனாய்வு அதிகாரிகளை, தமிழர் வாழும் புலம்பெயர் தேசத்தை நோக்கி, தமிழர் சார்பு செயல்பாட்டாளர்களை இலக்கு வைத்து நகர்த்தியிருந்தது. அதில் பலர் விலை போய்விட்டனர்.! 

அடுத்ததாக தமிழர் ஊடகங்கள் இலக்கு வைக்கப்பட்டு காய்கள் நகத்தப்பட்டன.! 

அவர்களின் நடவடிக்கை வெற்றியடைந்து வருகின்றது என்பதற்கு சான்று இந்த செய்திகளே. இன்று புலம்பெயர் தேசத்து தமிழரின் பல ஊடகங்கள் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துள்ளன. அதில் முதன்மையானது லங்காசிறி (தமிழ் வின்) அடுத்தது IBCஆகும். 

இன்று சிங்கள அரசின் சார்புநிலை எடுத்துள்ள ஊடகங்கள் நேரடியாக தமது ஆதரவை தெரிவிக்காமல் "வாழைப்பழத்தில் ஊசியை" ஏற்றுவது போல செய்திகளையும், தலையங்கங்களையும் தீட்டி வருகின்றது. இது ஒருவிதமான மூளைச் சலவை. இதில் இவர்கள் கூற விளைவது என்ன? ஐந்து செய்திகளையும் ஒருமுறை பாருங்கள். 

முதலாவது செய்தி
**************************** 
நிசாந்த சிறி வர்னசிங்க கூறுகின்றார் "நல்லிணக்கத்திற்கு சிங்கள மக்கள் தேவைக்கு அதிகமாகவே அர்ப்பணிப்பு செய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் அர்ப்பணிப்பினையோ முன்னுதாரணத்தையோ வழங்கத் தவறியுள்ளனர்" 

எந்த நல்லிணக்கத்தை சிங்கள அரசு காட்டி உள்ளது?

சம்பந்தன் ஐயாவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தமையா? 

அந்த ஒரு பதவியும் அவருக்கானது மட்டுமே.! 

அது தமிழ் மக்களுக்கானது அல்ல.!

அந்த பதவிக்கு பதிலாகத் தான்  முல்லைத்தீவு,கொக்குளாய்,நாயாறு தொடங்கி நாவற்குழிவரை சிங்களமயமாக்கி வருகின்றனர். மொழித்திணிப்பையும், தமிழர் ஊர்களுக்கு சிங்களப்பெயரையும், தமிழர் பூர்வீக நிலங்களில் புத்தர் சிலையையும் நிறுவி,சிங்கள ஆக்கிரமிப்பை அரங்கேற்றி வருவது தான் நல்லிணக்கமா?

இரண்டாவது செய்தி 
******************************** 
" மனோகணேசன் கூறுகின்றார். யாழ். பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகளே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்"

மனோ கணேசன் அவர்கள் புலிகளின் காலத்தில் தமிழர் சார்பு நிலையில் இருந்து, இன்று தன்னை நடுநிலையாளர் போல சித்தரிக்க விழைகின்றார். 

ஐயா மனோ அவர்களே, கொழும்பு வாழ் தமிழராகிய உங்களுக்கு எங்களது பூர்வீகம் தெரிய நியாயம் இல்லை.! 

யாழ் எங்களின் இதயம், அது எங்களின் கலாச்சாரம், அது எங்களின் விழுமியம், அது எங்களின் பூர்வீகம். எமெக்கென்றொரு காலை, கலாச்சாரம், பண்பாடு, உள்ளன.! 

ஐயா, யாழ் பல்கலைக்கழகம் தமிழராகிய எமக்கு, எங்களின் அடையாளம்.!  "தமிழர்கள்" அதை யாருக்கும், யாருக்காகவும் எப்போதும் விட்டுத் தரமாட்டார்கள்.! 

இதன் பின்னால் யார் உள்ளனர் என்று எமக்குதெரியும், அது உங்களுக்கு தெரியும் என்று, எங்களுக்கும்  தெரியும்.!

மூன்றாவது செய்தி 
****************************
"யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விடயங்களை அறிவதற்காக 3 அமைச்சர்கள் கொண்ட குழு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது" 

பல்கலை பிரச்சனையில் அமைச்சர்களுக்கு என்ன வேலை? 

அதுவும் மூன்று அமைச்சர்கள் சென்று விசாரிக்கும் அளவுக்கு இந்த விடயத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? 

ஏனெனில் இந்த விடையத்தை திரைமறைவில் கையாழ்வதே சிங்கள உளவுத்துறை என்பது எமது மக்களுக்கு தெரிய நியாயம் இல்லை தான்.!

நான்காவது செய்தி 
****************************
யாழ்ப்பாணத்தில் தேர் இழுக்கும் இராணுவத்தினர்!

இந்த செய்தியை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள் நண்பர்களே. இதன் மூலம் என்ன சொல்ல வருகின்றார்கள்? 

சிங்கள இராணுவத்தினர், தமிழ் மக்களுடன் கலாச்சார ரீதியில் அன்னியோன்னியமாக இருப்பதாக மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க முற்படுகின்றனர்.! 

அதனால் தான் புகைப்படம் மற்றும்  ஆச்சரியகுறியுடன் இது போன்ற செய்திகளுக்கு தற்போது முக்கியதுவம் கொடுத்து பிரசுரிக்கின்றனர்.!

இது போன்ற செய்திகள் மூலம் சிங்கள இராணுவத்தை புனிதர்கள் போல தமிழர் மனங்களில் விதைப்பதை, தமிழர் தரப்பு உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது உங்கள் கடமை.!

ஐந்தாவது செய்தி 
*************************
"புலம் பெயர்ந்த மக்களின் நிதியில் புலிகளால் தோற்றுவிக்கப்படட  IBC புதிய பாதையில் பயணிக்கின்றது. நேற்று முன்தினம் தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பி உள்ளனர்" 

புலிகளின் பல கட்டமைப்புகள் பல விலை போனமைக்கு இந்த செய்தியே போதும்.!

இந்த நிகழ்ச்சியின் ஊடாக இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள்? 

சிங்கள இராணுவத்தினரை தேவதூதர்களாக முன்னிலைப்படுத்தி எதை சாதிக்கப்போகின்றனர்.? 

சிங்கள தேசமே திரண்டு வந்து இரத்ததானம் செய்தாலும் நாம் சிந்திய இரத்தத்தின் ஒரு பங்கை கூட எட்ட முடியாது. 

கோடாரிக்காம்புகளே!! நீங்கள் விலை போனது போனதாகவே இருக்கட்டும்.! 

உங்கள் இருப்புக்காக நாம் சிந்திய குருதியின் மேல் சேற்றை வாறி இறைக்காதீர்.! 

ஐரோப்பிய தேசத்தில் சுகவாழ்வு வாழ்ந்த உங்களுக்கு தெரியாது, நாம் சிந்திய வியர்வையும், குருதியும், வேதனைகளும் எவ்வளவென்று.! 

நாங்கள் நிறைய இழந்துவிட்டோம்.!

தமிழீழ கனவுடன் மாண்டுபோன அந்த ஐம்பதாயிரம் மாவீரர்களையும் ஒருமுறை நினைத்து பாருங்கள்.! 

நீங்கள் உதவாவிட்டாலும் பரவாய் இல்லை, உபத்திரவம் செய்யாதீர்கள்.! 

தமிழர் இது போன்ற போலிகளின் மேல் நம்பிக்கை வைக்காது, உங்கள் மனச்சாட்சியை ஒரு முறை கேட்டு அதன்படி பயணியுங்கள்.!

அன்பு நண்பர்களே ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். 
சர்வதேச செயல்பாட்டாளர்கள் தொடங்கி, தமிழர் ஊடகங்கள்வரை பெரும்பாலும் (ஒரு சிலரை தவிர) சிங்கள அரசின் புலனாய்வுத்துறையின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் உள்ளனர். 

தயவு செய்து போலிகளை இனம் காணுங்கள்.!

எல்லா செய்திகளும் ஒரே இடத்தை நோக்கி கையை காட்டுவதை உணருங்கள். 

அது சிங்கள அரசின் புது வடிவமான, தனிச்சிங்கள தேசம்.!
மனச்சுமையுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments