செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இச் சம்பவம் நடைபெற்றதாக கனகராயன்குளம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடைந்த சிலையின் துண்டுகள் பாகங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
கனகராயன்குளத்தில் நிலை கொண்டிருந்த அதிரடிப்படையினர் தமது முகாமைக் கைவிட்டு அந்த முகாம் அமைந்திருந்த காணியில் இருந்து வெளியேறி வேறிடத்திற்குச் சென்றுவிட்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்திற்கு அமைவாக குறித்து கூறுப்பட்ட பொதுமக்களுடைய காணிகள் பொது இடங்கள் என்பவற்றில் இருந்து இராணுவத்தினரும் அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் வெளியேறி வேறிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற பணிப்புரைக்கு அமைவாக கனகராயன்குளத்தில் நிலைகொண்டிருந்த அதிரடிப்படையினரும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
ஆயினும், அவர்கள் தமது முகாமுக்குள் வைத்து வழிபட்டு வந்த புத்தர் சிலையொன்றை அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அதனைக் கவனிப்பதற்கோ அல்லது பாதுகாப்பதற்கோ எந்தவித ஏற்பாடும் இல்லாதிருந்த நிலையிலேயே இந்த புத்தர் சிலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கி உடைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments:
Post a Comment