சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு, இலங்கை அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். போராட்டத்தின்போது சிறிசேனாவின் உருவபொம்மையை எரித்தனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 107 தமிழர்கள் உயிரிழப்புக்கு நீதி விசாரணை கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப்போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment