August 06, 2016

யாழ் தீவகம் சரவணை சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா

யாழ் தீவகம் சரவணை சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா கடந்த 27.07.2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி, தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் தினமும் இடம்பெற்று வந்ததுடன்-4ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு செபமாலையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆராதனை இடம்பெற்று- 5ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட முன்னாள் ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி சிறப்பாக  இடம்பெற்று பின்னர் அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

சின்னமடு அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவில் கலந்து கொள்ள-தீவகத்திலிருந்தும்,யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.





No comments:

Post a Comment