சீரற்ற காலநிலை மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் படகுப் பயணிகள் சர்வதேச கடற்பரப்பிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இந்தோனேசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது மிகவும் மோசமானது என சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.
கர்ப்பிணிப் பெண் ஒருவர், பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட நாற்பத்திநான்கு பேர் இந்தப் படகில் பயணித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இந்த படகு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்பரப்பில் இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்தது.
வெள்ளிக்கிழமை குறித்த படகுபயணிகளை சர்வதேச கடலுக்குத் திருப்பி அனுப்பி வைக்க இந்தோனேசிய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர் எனினும் சீரற்ற காலநிலை காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.
காலநிலை சீரடைந்ததும் மீளவும் படகுப்பயணிகள் திருப்பியனுப்பி வைக்கப்படுவர் என மாகாண காவல்துறைப் பொறுப்பதிகாரி ஹுசைன் ஹமீடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரப்புக்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தே இந்தோனேசிய அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் அனுமதித்தனர் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும், உண்மையில் சீரற்ற காலநிலை காரணமாகவே இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சோ அல்லது பொறுப்பு வாய்ந்த தரப்புக்களோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புக்க ளையும் வெளியிடவில்லை.

No comments:
Post a Comment