2015 ஆண்டின் தீபாவளி தினத்தை கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக கொண்டாடியுள்ளனர்.
மகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்வுகளிலும், பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர்கள் தமது இல்லத் தந்தையுடன் தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், ஆசிகளையும் பெற்றுக்கொண்டனர்.
மாலை சிற்றுண்டியின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்று மகிழ்வாக விளையாடி மகிழ்ந்தனர் செல்வராசா. பத்மநாதனும் ( குமரன் பத்மநாதன்) கலந்துகொண்டார்.




No comments:
Post a Comment