September 19, 2015

வரும் 28-ம் தேதி உலகம் அழிந்துவிடுமா?

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர்.

உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய பிரபல எழுத்தாளரான ஜீலி ரோ எழுதிய புத்தகங்களின் குறிப்பிட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆராய்சியாளர்கள் செப்டம்பர் 28-ம் தேதி தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலவால் அழிவு எதுவும் ஏற்படாது என ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment