September 25, 2015

தேசியமட்ட பளுதூக்கலில் வல்வை மாணவி சாதனை

வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடை பெற்ற பளுதூக்கல் போட்டியில் 3 ஆவது இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். போட்டி கடந்த புதன்கிழமை பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சுமார் 80 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் செல்வி தசாந்தினி 80 கிலோகிராம் நிறை யைத் தூக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன் னர் யாழ்.பளுதூக்கல் சங்கத்தினால் நடத்தப்பட்ட பளுதூக்கல் போட்டியில் பெண்கள் பிரிவில் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 செல்வி தசாந்தினி வல்வை சிதம்பரக் கல்லூரி க.பொ.த (உயர்தர) வர்த்தகப் பிரிவு (2016) மாணவி ஆவார். 

   

No comments:

Post a Comment