September 02, 2015

ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வு இல்லை சமஸ்டியே இறுதி தீர்வு : சுமந்திரன் எம்.பி

ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இதற்கு மேலும் அதிகாரங்களைப் பகிர முடியாததன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி முறையிலான தீர்வினை வழியுறுத்துவதாகவும், இதுவே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போரக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். எட்டாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

No comments:

Post a Comment