அத்துருகிரிய - பனாகொட - கப்புருகெட பிரதேசத்தில் தாக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் பாழடைந்த வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கவிந்து தேவேந்திர கப்புருகே என்ற குறித்த சிறுவன், வீட்டில் காணாதிருந்த நிலையில் அவரது பெற்றோரும், அயலவர்களும் சிறுவனை தேடியுள்ளனர்.
இதனை அடுத்தே குறித்த சிறுவனின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் இருந்த மற்றுமொரு பாழடைந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment