August 11, 2015

போர்குற்ற விசாரணைகளை முடக்க சுமந்திரனுக்கு ஆதரவளியுங்கள்

ஶ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாடுபட்ட வல்லரசுகள் அதன் பலனை அனுபவிக்க சுமந்திரன் அவர்களின் வெற்றியை எதிர்பார்க்கிறது அத்துடன் அவரின் வெற்றிக்காக களத்திலும் இறங்கியுள்ளன.




சுமந்திரனின் வெற்றிக்காக அ
உலக வல்லரசனின் தூதுவராலயமும் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளதாக யாழிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழிற்கு விஜயம் செய்துள்ள உலக வல்லரசின்  தூதுவராலய அதிகாரிகள் குழுவொன்று இது தொடர்பில் பலதரப்புக்களினையும் அழைத்து தகவல்களை பெற்றுவருகின்றது. சுமந்திரனிற்கான வெற்றி வாய்ப்பு எவ்வாறிருக்கின்றது? 

மக்கள் ஏன சுமந்திரனிற்கு ஆதரவளிக்க மறுக்கிறார்கள்? போன்ற பல கேள்விகளை எழுப்பிவருவதுடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பான சனல் -4 செய்தியினையும் நிராகரித்தும் வருகின்றனர்.

முன்னதாக தமது கட்சி சார்ந்த விஜயகலா வெல்கின்றாரோ இல்லையோ சுமந்திரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் வரவேண்டுமென ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டிருந்தார்.அத்துடன் இந்திய  தூதுவராலயமும் சுமந்திரனின் வெற்றிக்கு பாடுபட்டுவருகின்றது.

போர்குற்ற விசாரணையை முடக்குவது உள்ளிட்ட பல விடயங்களினில் சுமந்திரனின் வெற்றி இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு தேவையாக உள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அத்துடன் தம்பி சுமந்திரனை நாடளுமன்றம் அனுப்புங்கள் என மாவை தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment