இலங்கையில் அமையவுள்ள புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கருணாரட்ன ஜெயசூரியவை பெயரிட திட்டமிட்டுள்ளதாக சிறிகொத்த தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய தேசிய கட்சி வழிக்காட்டி குழுவின் தலைவராக கரு ஜெயசூரிய செயற்பட்டார். ஐதேக தலைமைத்துவ சபையின் தலைவராக செயற்பட்ட இவர் 2014 ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் தேர்தல் பிரச்சார குழு தலைவராக இருந்து நாட்டில் மாற்றத்திற்கு வித்திட்டவர் ஆவார்.
கட்சியிக்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட கரு ஜயசூரிய இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருதார்.
எனினும், ஐக்கிய தேசிய கட்சிக்காகவும், இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக மேலும் சில வருடங்கள் தன்னை அரப்பணிப்பதாகவும், அதன் பின்னர் கௌரவமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment