August 20, 2015

தேசிய அரசு மகிந்த ஆதரவு -அமைச்சர் பதவி ஏற்பாரா?

தேசிய அரசாங்கம் அமைப்பது மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அதன் பகுதியாக இருப்பதற்கு எடுத்த தீர்மானம் குறித்து தனக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தேசிய அரசில் மகிந்த அமைச்சுப்பொறுப்பை ஏற்பாரா என்பதே அடுத்த கேள்வி 


இன்று காலை இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கூட்டத்தில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். 


இந்த கூட்டத்திற்கு மஹிந்த தரப்பினர் வருகை தந்திருந்தனர். தேசிய அரசாங்கம் அமைக்கும் தீர்மானத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் என டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார். அதற்கு ஜனாதிபதி பதில் கூறவில்லை.

இந்த தேசிய அரசாங்கம் வேறு பெயரில் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. தேசிய என்ற சொல்லுக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வேறு பெயர் சூட்ட இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment