August 12, 2015

கப்பம் பெறும் யுகம் உருவாகியுள்ளது - மஹிந்த

சிறையில் இருந்து கொண்டு வியாபாரிகளிடம் கப்பம் பெறும் யுகமும், அவர்களை கொலை செய்யும் யுகமும் தற்சமயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியின் போது முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்தார்கள்.

எனினும், இந்த அரசாங்கம் அவர்களை விரட்டி விட்டு பாதாள உலக குழுவினரை வர வழைத்துள்ளது.

தாம் ஆட்சிக்கு வந்தால் அந்த குழுவினரை ஒரு கிழமைக்குள் டுபாய்க்கு அனுப்ப பேவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment