August 05, 2015

இந்தியாவில் ஒரே இடத்தில் இரு ரயில்கள் தடம்புரண்டன!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரு ரயில்கள் தடம்புரண்டதில் 27 பேராவது பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து புலன்விசாரணை செய்யுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கடுமையான மழையால் வெள்ளம் ஏற்பட்டிருந்த இடத்திலேயே இந்த விபத்து நடந்ததாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு ஆற்றுக்கு மேலே உள்ள மாலம் ஒன்றில் சில நிமிட இடைவெளியில் இந்த இரு ரயில்களும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

பல பெட்டிகள் ஆற்றுக்குள் விழுந்துவிட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment