யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5 இலட்சத்தி 29 ஆயிரத்து 239 பேருக்காக 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கு வழமைபோன்று விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற பொது தேர்தலுக்கான ஆரம்பக் கட்ட ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்களிப்பு நிலையங்கள், வாக்கென்னும் நிலைங்களுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்தி 50 ஆயிரத்து 146 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தினையும் உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்தி 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்கு 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் மட்டும் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment