 |
| mobile |
கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படங்களை வைத்திருந்த நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் நகரில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குறித்த நபரை அழைத்து அவரின் கையடக்க தொலைபேசியை சோதனை செய்த போது ஆபாசப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதுசெய்யப்பட்ட நபரை நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது