February 06, 2015

யாழ்ப்பாண மரக்கறிகளால் மொத்த விலைகள் குறைந்த


யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்துவரப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில். மரக்கறிகளின் விலைகள் மேலும் குறைவடைந்துள்ளன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் 70 தொடக்கம் 100 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

கரட், பிட், கோவா, கிழங்கு, பச்சை மிளகாய், பாகற்காய், அவரை போன்ற மரக்கறிகள் யாழ்ப்பாணத்திலிருந்து அதிகளவில் கிடைக்கப் பெற்றுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் மரக்களின் மொத்த விலைகள் 300 ரூபாவுக்கும் அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment