காக்கிசட்டை படத்தின் தலைப்பே படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டுகிறது. முதன்முறையாக சிவகார்த்திகேயன் போலிஸ் கெட்டப்பில் தோன்றியுள்ளார். ஆக்சன் இருந்தாலும் வழக்கமான தனது காமெடியிலும் அசத்தியுள்ளார்.
கதை
டிரைலர், பாடல்களில் பார்த்தபடியே சிவகார்த்திகேயனின் பெயர் மதிமாறன் தான். ஆரம்பத்தில் அமைதியான பொலிசாக வந்து காமெடி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தால் தான் யார் என்பதை நிருபிக்கும் விதமாக சீரியசாக களமிறங்குகிறார்.உடலுறுப்பு வர்த்தகத்தில் நடக்கும் குற்றத்தை கண்டறிந்து அதை எப்படி முழுவதுமாக அழித்தார் என்பது தான் மீதி கதை.
படத்தின் நடுவில் வழக்கம்போல ஸ்ரீதிவ்யாவுடன் ரொமான்ஸ் செய்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு பொலிஸ் வேடம் ஓரளவு நன்றாக பொருந்தியுள்ளது. காமெடியிலும், ஆக்சனிலும் அசத்தியிருக்கிறார்.
பிரபு படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து மனதில் பதிகிறார். நாயகி ஸ்ரீதிவ்யா படம் முழுவதும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார்.இம்மான் அண்ணாச்சியின் ஒன்லைனர் காமெடி ரசிக்கவைக்கிறது.
ஆனால் அவரின் வழக்கமான காமெடி மிஸ்ஸிங்படத்தில் மழையில் வரும் சண்டை பிரம்மிக்க வைக்கிறது. அஜித், விஜய், ரஜினி என உச்ச நட்சத்திர ரசிகர்களை கவரும் விதமாக அங்கங்கே வசனங்கள் வைத்து கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர்.
எதிர்நீச்சல் படத்தைப்போலவே இப்படத்தில் அனைவரையும் கவரும் விதமான காட்சிகளை வடிவமைத்துள்ளார்..சுகுமாரின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே செம ஹிட், பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி சீரியசாகவும் செல்கிறது.
ரேட்டிங்: 3/5
