யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 16 வயதுடைய சிறுமியை, திங்கட்கிழமை (23) இரவு கைதுசெய்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஸ், செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.
சிறுமியிடம் இருந்து 50 கிராம் கஞ்சா கரைகள் இரண்டு கைப்பற்றப்பட்டன.
இந்தச் சிறுமி திருமணம் ஆகியவர் என்றும், தனது கணவருக்கு வழங்குவதற்காக கஞ்சாவை கொண்டுசென்ற போதே கைதுசெய்யப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி கூறினார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment