February 18, 2015

நைனாமடுவில் விபத்து

இன்றைய தினம் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப்பயணித்த பயணிகள் பேரூந்து ஒன்று நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் நைனாமடுக்கு அண்மையாக  மரம் ஒன்றுடன் மோதுண்டு அதன் சில்லுகள் ஏனைய பாகங்கள் உடைந்த நிலையில் பிரண்டுள்ளது.பயணிகளுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. வாகனச்சாரதி நேற்றையதினம் சிவராத்திரி விரதமாகையால் கேதீச்சரத்துக்கு இரவிரவாக பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு நித்திரையின்றி இன்று காலை தமது வழமையான போக்குவரத்துச்சேவையை ஆரம்பித்தபின்னர் நித்திரைதூங்கியே இவ்விபரீதம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.