முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நுகேகொடையில் இன்று பொதுக் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது.
இதில் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்பன்பில, பிரசன்ன ரணதுங்க, சாலிந்த திசநாயக்க மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்குபற்றிய இந்த குறிப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய உதய கம்பன்பில,
‘5000 பேர் கூட இந்த கூட்டத்திற்கு வருகை தரமாட்டார்கள்.அவ்வாறு வந்தால் தான் அரசியலில் இருந்து விலகுவேன் ‘ என்ற அசாத் சாலி கூறிய கருத்தை கூறி இனிமேல் அசாத் சாலி காலி. இனிமேல் அசாத்சாலி ஒரு நடைபிணமாக தான் அரசியல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
.jpg)




