கடத்தப்பட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்துத் தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளிடம் முறையான விசாரணை நடத்தி விடுதலை செய்ய வலியுறுத்தி வடக்குக் கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று வவுனியாவில் 'நாங்கள்' இயக்கம் மற்றும் பிரஜைகள் குழு என்பவற்றின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,'கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளை விடுதலை செய்' நாங்கள் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே', 'புதிய அரசே எமது பிள்ளைகளுக்கு பதில் தா' அரசியல் கைதிகளை விடுதலை செய்' என எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் இடம்பெற்றது. நடைபெற்றது.
இதேவேளை திருகோணமலை இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தை 'நாங்கள்' அமைப்பு மற்றும் கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு, திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
திருகோணமலையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் நூற்றுக் கணக்காண மக்கள் கலந்து கொண்டதுடன் கடத்தப்பட்டு காணமல் போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.