உலகத் தமிழர்கள் அனைவரும் பண்பாட்டுத்தளத்தில் இணைகின்ற பெருநாளான தமிழர் திருநாளினை வெகுசிறப்புடன் கொண்டாடுவதற்கான முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
மதச்சாயமற்று தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஒன்றுபடுகின்ற ஓர் பண்பாட்டு நிகழ்வாக அமைகின்ற தமிழர் திருநாளினை கொண்டாடுவதற்கு பல்வேறு தமிழர் பொது அமைப்புக்களும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சு கனடாவிலும் பிரித்தானியாவிலும் இந்நாளினை நிகழ்வரங்காக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக அவ்வமைச்சின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

