January 12, 2015

விபத்தில் சிக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பயணித்த கார் அகமதாபாத்தில் சிறு விபத்தில் சிக்கியது. குஜராத் மாநிலம், காந்திநகரில் நேற்று நடந்த குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டுக்கு இடையே அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஒபாமா வருகை குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே இன்று மதியம், ஜான் கெர்ரி அகமதாபாத் விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்புக்கு உடன் சென்ற காருடன் ஜான் கெர்ரி கார் மோதியது. இது லேசான விபத்துத்தான் என்பதுதான், ஜான் கெர்ரி காயமின்றி தப்பினார். இந்த சம்பவத்தால் அகமதாபாத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.