விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக முல்லைத்தீவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியோரங்களில் போஸ்டர்கள் வீசப்பட்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.வடக்கில் எமக்கு புதிய சூரியன் எனும் தலைப்பிடப்பட்ட குறித்த போஸ்டரின் விடுதலைப்புலி இயக்கத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மட்டுமே பொறிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது.முல்லைத்தீவு, முள்ளியவளை, தண்ணிரூற்று ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு போஸ்டர்கள் வீதியில் வீசப்பட்டிருந்ததாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுதொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
