வடக்குமாகாண ஆளுநராகக் கடமையாற்றும் ஜீ.ஏ.சந்திரசிறி, ஆட்சிமாற்றத்தை அடுத்து தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியுள்ள அவர், நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வந்து தனது உடமைகளை எடுத்துச் செல்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியின் கீழ் பணியாற்ற அவர் விரும்பவில்லை என்றும், இதனால் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது குடும்பத்தாருடன் சென்று குடியேற அவர் முடிவு செய்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன்.
புதிய ஆளுநர் பாலிக்ககார கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றியவர். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமாவார்.
