January 02, 2015

நெலும் தெனிய எனும் இடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிகிறது

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உள்ள நெலும் தெனிய எனும் இடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சற்றுமுன் வரை (இலங்கை நேரம் 16:45) தீயணைப்பு படையினர் வருகை தரவில்லை எனவும். பாரிய சத்தத்துடனும் , தீ ஜுவாளையுடனும் குறிப்பிட்ட எரிபொருள் நிலையம் எரிவதாகவும். மக்கள் சிதறி ஓடுவதாகவும் தெரிவித்த எமது நிருபர்.
இதுவரை சேதவிபரம் பற்றி தெரியவில்லை.  எரிபொருள் நிரப்பும் பவ்சர் ரக வாகனத்தில் ஏற்பட்ட தீயே இதற்கு காரணம் எனவும்  பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பிரதான பாதை மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.