ஜனாதிபதியின் யாழ்.வருகையினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 30ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா, பிறிதொரு திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அத்தினத்தில் நடைபெறாது எனவும், பிறிதொரு தினத்திலேயே பட்டமளிப்பு விழா நடைபெறும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதியின் விஜயமா காரணமென எழுப்பப்பட்ட கேள்விக்கு காரணங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாதென நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், பட்டமளிப்பு விழா நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

.jpg)